உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

நீக்கிவிட்டு, நீ புது முறையில் பாடப்போகிறாயோ? எவரைப்பற்றி? என்று கேட்பார்கள் அல்லவா! கூறுகிறார்!!

இன்னல்தரு ஈட்டிவளையத்துள்
ஆண்டுபல இருந்தோர்
ஏனாதானோக்கள்
எச்சிற் கலையங்கள்
சாவுவரும் வரையில்
சளைக்காது போரிட்ட
கந்தலுடைக்காரர்
களம் கிளப்பும்
தூசி ஓசையுடன்
ஓலம் உளம்மருட்ட
மண்டை உடைபட்டோர்
கண் புண்ணானோர்

இவர்களைப்பற்றித்தான் நான் பாடப்போகிறேன் என்கிறார். இவர்கள் இன்னலைக் கண்டவர்கள், இழிநிலையில் தள்ளப்பட்டுள்ளவர்கள், இவர்களை மற்றவர்கள் கவனியாமல், பூபதிகளைப் பாடிக்கொண்டிருந்து வந்தனர்; நான் இந்த

ஏனோதானோக்கள்
எச்சிற்கலையங்கள்

என்று ஒதுக்கிவிட்டிருக்கிறீர்களே, அவர்களைப்பற்றித் தான் பாடப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு, மேலும் எந்தவிதமான ஐயப்பாடும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன்

மார்பகம் தன்னில்
விருதுகள் மின்னிட
பரிஏறிப் படைகாணப்
பவனி வரும்
படைத்தலைவனாம்
மன்னனின் செல்லப்பிள்ளை

இருக்கிறானே, அவனைப்பற்றிப் பாடப்போவதில்லை என்று கூறுகிறார்; மன்னன் தனக்கு விருப்பமான ஒருவனைப் படைத்தலைவன் ஆக்கிவிடுவான்; வீரன் என்பதற்காக அல்ல! அவன் மன்னனின் செல்லப்பிள்ளை