181
பரப்புக் காட்டாமலும் பேசவேண்டும். அன்று நான் நடந்துகொண்ட முறை குறித்து விவரமறிந்தவர்கள் பாராட்டியது கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் அப்போதே, திருமதி செழியனிடம் சொன்னேன், “எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தமிழ் நாட்டில் சில இதழ்கள், அண்ணாத்துரை இந்தியைப் பரப்ப ஒத்துக் கொண்டான்” என்று மட்டும் வெளியிடும், பாருங்கள்” என்று சொன்னேன், இதழ்களின் போக்கு எனக்கும் தெரியுமல்லவா! நானும் ஒரு பத்திரிகை நடத்துபவன் தானே!! நான் கூறியபடியேதான் சில இதழ்கள் வெளியிட்டன. முதலமைச்சர் பக்தவத்சலமும் அதை வைத்துக் கொண்டுதான் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது.
இதுவும் ஒரு நல்லதற்கே பயன்படுகிறது; ஏனெனில், அன்று நடைபெற்றது முழுவதையும் எழுத ஒரு தூண்டுகோல் கிடைத்திருக்கிறது! நிருபர்கள், எவரெவர், என்னென்ன கேள்விகளை, என்னென்ன நோக்கத்துடன் கேட்டனர் என்பதனையும், அவற்றினுக்குப் பதில் அளிக்கும் முறையில் நான் என்னென்ன கருத்துக்களை எடுத்துக் கூறினேன் என்பதனையும் கூறிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.
இந்து இதழிலே மட்டும், குத்திக் கிளறி ஒரு நிருபர் கேட்டபோது அறைகூவலாக அண்ணாதுரை, இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதை சர்க்கார் விட்டு விட்டு, சர்க்கார் முன்னின்று இந்தி பரப்புவதை விட்டுவிட்டு, மக்களின் அமைப்பே இந்தியைப் பரப்ப முனைந்து, என் உதவியை நாடினால், செய்கிறேன் என்று கூறினார் என்று வெளியிட்டிருக்கிறது.
இந்து வெளியிட்டிருக்கிற முறையிலிருந்து, (1) சர்க்கார் இந்தியை ஆட்சி மொழியாக்குவதை விட்டுவிட வேண்டும் (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் முனையக் கூடாது என்பவைகளை நான் வலியுறுத்தி இருப்பது நன்கு விளங்கும்.
நமக்குத் தேவை, (1) இந்தியை ஆட்சிமொழி ஆக்கும் முயற்சியை சர்க்கார் கைவிட்டுவிட வேண்டும் என்பது (2) இந்தியைப் பரப்ப சர்க்கார் தனி அக்கறை காட்டும்