51
இதைச் சாப்பிடுங்கள் குமட்டல் போய்விடும்! தேனில் குழைத்துச் சாப்பிடுங்கள், கசப்புத் தெரியாது!! என்று பக்குவம் சொல்கிறார்கள்?
இங்கு நான் குறிப்பிட்டிருப்பது வாயில் ஏற்படும் குமட்டல் அல்ல; மனத்திலே ஏற்படும் குமட்டல்!! இதற்கு மருந்து எளிதில் கிடைக்காது.
நமது கழக வளர்ச்சி இந்த மனக் குமட்டலை மூட்டி விட்டிருக்கிறது—பலருக்கு! துரும்பாக இளைத்துப் போனவர்களும், மேனி கருத்துப் போனவர்களும் உண்டு, இதனால்.
இருப்பதை இழந்திட மனம் இல்லாத நிலையும், இருப்பது போய்விடுமோ என்ற பீதியும், அவன் பெற்று விடுவானோ இவன் பெற்று விடுவானோ என்ற அச்சமும், இது போய்விட்டால் என்ன செய்வது என்ற ஆயாசமும் அற்ப சொற்பமானவன். யோக்கியதை அற்றவன் என்று நாம் யாரைக் கருதிக் கொண்டிருந்து வந்தோமோ அவர்கள் அல்லவா நல்ல நிலை பெற்று விடுவார்கள் போலத் தெரிகிறது என்ற எண்ணமும் ஏற்படும்போது, மனக்குமட்டல் ஏற்படும்.
அந்தப் பயலா போகிறான் மோட்டாரில்?
ஆமாம், அவரே தான்!
அத்தனை, பெரிய மோட்டாரிலா? எவன் இவனை ஏற்றிக்கொண்டு போகிறான்?
மோட்டாரே அவருடையது தான்!
மோட்டார்... அவனுடையதா? படாடோபத்தைப் பாரேன்! பயல் எங்கே கடன் வாங்கி இந்தக் கார் வாங்கினான்?
அவர் ஏன் கடன் வாங்கப் பொகிறார்? அவரே பலருக்குக் கடன் தருகிறார்.
இவனா? கடன் தருகிறானா? ஏது? இவனுக்கு ஏது இத்தனை பணம்?
இப்படிக் கேட்டுவிட்டு, மனக்குமட்டல் கொள்பவர்களைக் காண்கிறோம், ஊரில், சில இடத்தில், அந்தக் குமட்டல்காரர், பிறகு தம்முடைய செவர்லேயில் ஏறிக்-