52
கொண்டு, கடற்கரை சென்றால் குளிர்ச்சியா காண முடியும்? நண்பரின் திருமணம் காணச்சென்று அங்கு சுந்தராம்பாள் அம்மையார், கேட்போரின் மனம் உருகும்படி ‘வெண்ணீறு அணிந்ததென்ன?’ என்று பாடிடும்போது இவர் செவியில் என்ன விழும்? மோட்டார் இவனுக்கென்ன? நன்ற வார்த்தைகள்!!
சாதாரண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கே ஏற்படக் கூடாது மனக் குமட்டல்—அது நல்ல இயல்பு அல்ல—உள்ளதையும் உருக்குலையச் செய்துவிடும், அதிலும் அரசியல் வாழ்க்கையிலே துளியும் குமட்டல் ஏற்பட்டு விடக்கூடாது—நல்ல நினைப்பே எழாது, நல்ல பேச்சே வராது,
திராவிட முன்னேற்றக் கழகம் வளருகிறது—மகிழ்ச்சியுடன் பெருமிதத்துடன் கூறுகிறோம்.
ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு எவை எவை துணை செய்யுமோ, அந்த வசதிகளைப் பெற்றில்லாமலேயே. பொது மக்களின் அன்பு நிறை அரவணைப்பின் காரணமாகவே வளருகிறது.
இந்தக் கழகத்தை, எதிர்க்காதவர் இல்லை, எதிர்க்காத நாளில்லை.
இந்தக் கழகத்தின்மீது வீசப்பட்ட வசை மொழிகளைத் திரட்டினால், புராணங்களைவிடப் பெரும் அளவு உள்ள பெரும் ஏடாக்கலாம்,
எனினும், கழகம் வளர்ந்து வருகிறது. வளர்ந்தால் என்ன! வளரக் கண்டு, மனக்குமட்டல் ஏற்படுவானேன்!
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை, திட்டங்களைக் கழகம் எதிர்க்கிறது என்பதாலா?
ஆம் என்றால், இதே செயலைச் செய்திடும் பல கட்சிகளின் மீது ஏற்படாத கோபம், கசப்பு, கழகத்தின் மீது ஏற்படக் காரணம்? மனக் குமட்டல் அளவுக்கு நிலைமை முற்றிவிடக் காரணம்?
கழகம், வளருகிறது எதிர்ப்புக் கிடையில் என்பது மட்டுமல்ல, பரவலாக ஒரு எண்ணம், நாட்டு மக்களிடம் ஒரு பேச்சு எழுந்துவிட்டிருக்கிறது, அடுத்த முறை