இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
59
காங்கிரஸ் கட்சியினால் என்பதைப் பொது மக்கள் பெரும் அளவு புரிந்து கொண்டு விட்டிருக்கிறார்கள். புரியவைப்பவர்கள் இந்தக் கழகத்தாரல்லவா என்ற எண்ணம் ஏற்படும்போது மனக்குமட்டல் அதிகமாகிறது.
அதன் காரணமாக, நம்மைப் பைத்தியக்காரர்கள், பகற்கனவு காண்பவர்கள் என்று, காமராஜர் ஏசி இருக்கிறார்.
நல்லவர்!
பொல்லாத வியாதி!
என்று கூறுவதன்றி, வேறென்ன கூறமுடியும், தம்பி! அவர்படும் அல்லல் கண்டு உள்ளபடி பரிதாபப்படுகிறேன்.
9-8-64
அண்ணன்,
அண்ணாதுரை