68
யின் ‘தங்க பிரேம்’ போட்ட மூக்குக் கண்ணாடியைச் சரிபார்த்து, எடுத்துக்கொண்டு போகிறான், கொடுத்திட. ஒரு உரையாடல் அவன் காதில் விழுகிறது.
“என்ன விலை, ரொட்டி,”
“பத்துப் பணம்.”
“பத்துப் பணமா? விலை அதிகம். எட்டுப் பணத்துக்கு வேறு இடத்தில் கிடைக்கிறதே!”
திரும்பிப்பார்க்கிறான், குரலொலி கேட்டு. அதே பெண்; சட்டை தைத்துக் கொண்டிருந்தாளே, விலை ஏற்றத்தால் நாசமாகிப் போனானே சிறு ரொட்டிக் கடைக்காரன் அவன் மகள்; உதவி செய்ய வந்த சீமான் மகனை வெறித்து விரட்டினாளே அதே பெண்!
“ஐயா! நலமாக இருக்கிறீர்களா?”—அவள் கேட்கிறாள்.
“இருக்கிறேன். போய்னீ!” என்கிறான் இலட்சியமறிந்தவன்.
போய்னீ என்பது கன்னியின் பெயர்.
“நான் இப்போது திருமதி கின் சால்விங்! எனக்கும் கின்சால்விங்குக்கும் போன மாதம் திருமணமாகி விட்டது.” என்கிறாள் அவள்.கின் சால்விங் என்பது யாருடைய பெயர் தெரியுமா தம்பி! சீமான் மகன் பெயர்!!
கதை அவ்வளவுடன் நின்றுவிடுகிறது! கருத்து என்னென்ன மலருகிறது எண்ணிப் பார், தம்பி!
ஓ, என்ரியின் விந்தை மிகுதிறமையைக் கூறிடவே கதை முழுவதும் சொல்லி வைத்தேன்—நான் இதிலே உன்னை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்வது,