69
போலப் பெறவேண்டுமென்று திட்டமிட்டு, வாணிபத் துறையினர் செய்திடும் சதி.
உணவுப் பொருள் விலை ஏற்றத்தின் காரணமாக அவதிப்படும் ஏழைகளின் வாழ்வு நொந்துபோகும் கொடுமையை நீக்கிட, இன்மொழி, இதமளித்தல், பரிவு காட்டுதல், எனும் முறைகள் பயன்படாது,
விலைவாசி ஏற்றத்தினால் ஏற்படுவது, ஏழைக்குப் பொருள் நஷ்டம் மட்டுமல்ல, பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன.இந்தக் கருத்துகளை உணர்ந்திடச் செய்வதற்கே, இந்தக் கதையைக் கூறினேன்.
உணவுப் பொருள்களின் விலை ஏறிவிட்டது; ஏறிக்கொண்டே இருக்கிறது என்பதைக் காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது!
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா! என்று கேட்கத் தோன்றும். என்ன செய்வது, தம்பி! இந்த உண்மையை ஒப்புக்கொள்ளும் மனம், இப்போதுதானே வந்திருக்கிறது, காங்கிரஸ் அரசுக்கு.
ஆண்டு இரண்டாகிறது நமது கழகத்தவர். விலைவாசி ஏற்றக்கொடுமையைக் கண்டு குமுறி எழுந்து, முறையிட்டுப் பலன் காணாததால், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் கண்களைத் திறந்திட முயன்ற நிகழ்ச்சி. வேலூர் சிறையிலே நான் அடைபட்டுக் கிடந்தேன், உள்ளம் வெதும்பிய நிலையில்.
என்ற உண்மையை ஒப்புக் கொள்ளக்கூட இந்த ஆள வந்தார்களுக்கு மனம் இல்லையே! இது என்ன ஆட்சி!! என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். நமது தோழர்கள் பல ஆயிரவர் சிறையிலே வாடிக் கிடந்தனர்; உள்ளே எத்துணையோ கொடுமைகள்; வெளியே எத்தனை எத்தனையோ ஏச்சுப் பேச்சுகள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டோம். இரு தோழர்களையும் பறி கொடுத்தோம்; இதயத்திலே தழும்பு பெற்றோம்.