உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஜெய்பூரில், ராஜஸ்தானத்து முதலமைச்சர் மாகன்லால் சுகாடியா என்பவர்மீது பாய்ந்து,

தனக்கும் தன் உறவினர்களுக்கும் இலாபம் தேடிக்கொள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று பலர் பேசியுள்ளனர்.

தாஸ் கமிஷன் போல ஒன்று அமைத்து, முதலமைச்சர் மீது குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சோஷிய லிஸ்டு கட்சியினர் உம்ராவ் சிங் என்பவர்,

உதயபூரில் தவறான முறையில் முதலமைச்சர் நிலத்தைப் பெற்று, அதில் இரண்டு இலட்ச ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள வீடு கட்டிக்கொண்டார்,

பாங்கியில், பல இலட்சம் ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.

தவறு! தவறு! இரண்டு இலட்ச ரூபாய் பெறுமானம் உள்ளது அல்ல. என் வீடு. ஒரு இலட்சம் கூடப் பொறாது. யாரேனும் ஒரு இலட்ச ரூபாய் கொடுப்பதாக இருந்தால், வீட்டையும் நிலத்தையும் தந்துவிட நான் தயார்!

என்று முதலமைச்சர் சுகாடியா முழக்கமிடுகிறார். அதைக் கேட்டு மற்றவர்கள் வாயடைத்துப்போய்விட வில்லை.

“சம்மதம்! எல்லா எதிர்க்கட்சியினரின் சார்பிலும் நான் முதலமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டாகிலும் கடன் வாங்கியாவது, சுகாடியா கேட்ட ஒரு இலட்சத்துக்குமேல் ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துத்தருகிறோம். வீட்டை விற்கத்தயாரா?

என்று ஒரு உறுப்பினர் கேட்கிறார். சுகாடியா பதில் ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.

இந்த ஆண்டு இத்தனை இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை விளை நிலமாக்கினோம்,

இந்த ஆண்டு இத்தனை விதமான புதிய தொழிற்சாலைகளைத் துவக்கி இத்தனை வேலை இலட்சம் பேருக்கு கொடுத்தோம்,