உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 16

இதயம் வென்றிட...2



பர்மிட்டும் லைசென்சும் பகை போக்கிப் பாசத்தை ஊட்டிவிடும்!
மதில் மேல் பூனை நிலையில் சிலர்
கிராமங்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்க!
மண்டலத்தின் தேர்தல் நேர வேலைகள்

தம்பி,

சென்ற கிழமை கூறியபடி தேர்தல் காலத்திலே விறுவிறுப்புடனும், மிகுந்த தந்திரத்துடனும் பணியாற்றிடும் சிலர்பற்றி எடுத்துக்காட்டுகிறேன். இவர்களை நமது தோழர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஊருக்குஊர் பெயர்கள் மாறிமாறி இருக்கும்-இயல்பு ஒரேவிதமானதாகவே இருக்கும்.

இவர்கள் தேர்தல் சமயம் தவிர மற்ற வேளைகளில் பொதுவாழ்க்கையில் இல்லாமல் இருக்கக்கூடும்; தேர்தலின்போதுமட்டும் தீவிரமாகிவிடுவர்.

தர்மபுரித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, நமது நண்பர்கள், காங்கிரசில் இன்னாரை வேட்பாளர் ஆக்கினால் இன்னின்னார் வேலை செய்யமாட்டார்கள். ஒதுங்கிக்கொள்வார்கள் என்றுகூடச் சொன்னார்கள்.