காஞ்சிக் கடிதம்: 13
விந்தை மாந்தர்கள்
பக்தவத்சலனார் சுளையை விட்டுத் தோலைச் சுவைப்பவர்
காத்திருப்போம்; காலம் தெளிவளிக்கும்
தம்பி,
ஊருக்குப் பெரியவர், அவரைக் காணும்போது வெறுங் கையுடன் போகக்கூடாது என்று எண்ணி, எலுமிச்சம்பழம் கொடுத்து வணக்கம் கூறுகிறாய் என்று வைத்துக்கொள் - என்ன செய்வார் அந்தப் பெரியவர் என்று எதிர்பார்க்கிறாய்? பதில் வணக்கம் கூறிவிட்டு, எதற்கப்பா இவ்வளவு மரியாதை, நீ என்ன எனக்குப் பழககமில்லாதவனா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்றவன் நீ—என்று பேசுவார் என்று தானே! யாருமே அப்படித் தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால்...!
★
சிரித்துச் சிரித்துப் பேசிடும் இயல்பு! எவரிடமும் விளையாடி மகிழும் சிறுவன்! அவனிடம் அன்பு காட்டி, உன்னால் இயன்றது ஒரு வாழைப்பழம், கொடுக்கிறாய், என்ன செய்வான் என்று எண்ணுகிறாய்? சிறுவன் துள்ளிக் குதிப்பான்! எங்க மாமா! தங்க மாமா! எனக்கு வாழைப்பழம் கொண்டுவந்து கொடுத்துது! என்று