49
மகிழ்ச்சியுடன் கூறியபடி தன் தாயிடம் பழத்தைக் காட்டி, பிறகு அதைத் தின்பான் என்று. ஆனால்...!
★
நீ மட்டும் சாக்கடை நாற்றத்தைப் போக்கிவிட்டு, இந்த இடத்தைப் பூக்கடை ஆக்கிக் காட்டு, நான் உனக்கு அடிமை ஆகிவிடுகிறேன் என்று ஒருவரிடம் கூறுகிறாய் என்று வைத்துக்கொள். அவர் என்ன செய்யவேண்டும்? முடிந்தால் நீ சொன்னதைச் செய்து காட்டிவிட்டுப் பிறகு உன்னிடம் வரவேண்டும், பார்! நீ சொன்னபடி செய்து விட்டேன், இப்போது என்ன சொல்கிறாய் என்று கேட்க வேண்டும். ஆனால்...!
★
ஊமைப் பெண்ணைப் பேசவைத்துவிடு. ஒன்பதே நாளில் நான் அவளைத் தேசிகர் மெச்சிடும் பாடகி ஆக்கிக் காட்டுகிறேன் என்று ஒருவரிடம் சொன்னால், அவர் என்ன பொருள் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பாய்? ஊமைப் பெண்ணைப் பேசவைக்க நம்மாலே முடியவா போகிறது; எதற்காக நாம் ஒரு வம்பான பந்தயத்திலே போய் மாட்டிக்கொள்வது என்று எண்ணி வாய் மூடிக்கொள்வார் என்றுதானே! ஆனால்...!
★
கொடுத்த கடனை மட்டும் கோபாலன் திருப்பிக் கொடுத்துவிடட்டும், பார்! நான் என் ஒரு பக்கத்து மீசையை எடுத்து விடுகிறேன்!!-என்று ஒருவரிடம் ‘சவால்’ பேசுகிறாய் என்று வைத்துக்கொள் - அவர் என்ன செய்ய வேண்டும்? கோபாலனை நச்சரித்தாகிலும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பிறகு வந்து பார்த்து, “கடனைத் திரும்பப்பெறவே முடியாது என்று சொன்னாயே! இதோ பார்!” என்று பணத்தைக் காட்டிவிட்டு, என்ன ஆவது உன்னுடைய ‘சவால்’ என்று கேட்கவேண்டும். ஆனால்...!
★
குத்துச்சண்டைக் குமரப்பனைக் குப்புற வீழ்த்திக் காட்டு, உனக்கு எட்டுப் பவுனில் தங்கத்தோடா செய்து போடுகிறேன் என்று கூறினால், அந்த நண்பன் என்ன