இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74
தோல்வியை நமது சிந்தனையைக் கிளறி, முறைகளைச் செம்மைப்படுத்தும் ஓர் வாய்ப்பாக மாற்றிட வல்லவரே, கழகத் தோழர்கள்.
இந்த நமது இயல்பை மேலும் விறுவிறுப்பானதாக்கிட, வெற்றிபெற்ற காங்கிரசார் ஏவிடும் தூற்றலையும் பயன் படுத்திக்கொள்வோம். வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சிவிட்டனர்; ஆம்! குருதியைத் துடைத்துக் கொண்டு, தொடர்ந்து பணியாற்றி வருவோம் துயரம் காரிருளெனக் கப்பிக்கொண்டிருக்கும், உணருகிறேன்; ஆனால், தம்பி! விடிவதற்கு முன்பு கருக்கல் அதிகமாகத் தான் இருக்கும். பொழுது புலரும், பொறுத்துக்கொள்; பணியாற்று.
18-4-65
அண்ணன்,
அண்ணாதுரை