உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

அவர்கள், ஓட்டு வேட்டையாடும் வலிவினைக் காங்கிரசுக்குப் புதிதாகச் சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

மகாத்மாவின் காலத்தில் அதன் தூய்மை காரணமாகக் காங்கிரசிடம் மக்கள் ‘பக்தி’ செலுத்தினர். காங்கிரசின் வலிவு மிகுந்திருந்தது.

காங்கிரசின் கொள்கை புதையுண்ட பிறகு, அதிலே புகுந்துகொண்ட புதியவர்கள், இலாப நோக்கத்துடன், திட்டமிட்டு, காங்கிரசுக்கு வலிவு ஊட்டியுள்ளனர்.

காந்தியார் காலத்துக் காங்கிரஸ், மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு கொண்டிருந்தது.

கொள்கையை இழந்துவிட்ட காரணத்தால் காங்கிரசுக்கு, முன்பு இருந்த வலிவு இல்லை என்று நாம் கூறும்போது, தம்பி! மக்களின் இதயத்தை வென்றிடும் வலிவு இல்லை என்பதைத்தான் எண்ணிச் சொல்கிறோம்.

கொள்கை இழந்த பிறகு காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள், மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் பெறும்படி செய்யவில்லை; அவர்களால் முடியாது; ஆனால், அவர்கள் மக்களின் ‘ஓட்டுகளை’த் தட்டிப் பறித்திடும் வலிவினைக் காங்கிரசுக்குத் தேடிக் கொடுத்துள்ளனர்.

பத்தினி கெட்டால் பளபளப்பு அதிகமாகும், துவக்கத்தில்! இறுதியில் இழிவு நாசம்! ஆனால், இடையிலே ஒரு புது மினுமினுப்பு, குலுக்கு, தளுக்கு ஏற்படும்.

காங்கிரசைத் தமது கூடாரமாக்கிக் கொண்டவர்கள் அதனுடைய பழைய புனிதத்தன்மையை மாய்த்து விட்டனர்; ஆனால் ஒரு புதிய பளபளப்பைத் தந்துள்ளனர்.

அந்தப் பளபளப்பு விவரமறியாதாரை மயக்கவல்லது என்பதனை மறந்துவிடக் கூடாது.

தனிப்பட்ட முறையில் தாக்கும் நொக்குடன் அல்ல, நிலைமையை விளக்குவதற்காகக் கூறுகிறேன்; காங்கிரஸ் தூய அமைப்பாக இருந்தபோது, பழைய கோட்டைப் பட்டக்காரரும், சங்கரண்டாம் பாளையத்தாரும், பூண்டி

அ.க.2—6