82
வாண்டையாரும், மூப்பனாரும் மற்றவர்களும் அதிலே இல்லை. அது, சிறை செல்ல, சொத்து இழந்திட, தடியடி பட, துப்பாக்கிக் குண்டடி ஏற்க அழைத்த காங்கிரஸ்.
எங்குச் செல்கிறோம் என்றும் தெரியாது, என்னென்ன இடர்ப்பாடுகள் என்பதும் புரியாது. எத்தனை நீண்ட பயணம் என்ற கணக்கும் அறியாது என்ன கிடைக்கும் என்று நினைக்கவும் முடியாது, ஒரு தூய தொண்டாற்றுகிறோம், இதயம் கூறுகிறது, அதன்படி நடக்கிறோம் என்று மட்டுமே உணர்ந்து பலர் காங்கிரசில் ஈடுபட்ட காலத்தைக் குறிப்பிடுகிறேன்.
அப்போது, வ. உ. சிதம்பரனாரும், திருப்பூர்க் குமரனும், சர்தார் வேதரத்தினமும் தேவைப்பட்டனர்; கிடைத்தனர்.
அவர்கள் காலத்துத் தூய்மை மங்கிற்று; மடிந்தது; காங்கிரஸ் ஒரு கட்சியாக வடிவமெடுத்தது; அரசியல் ஆதாயம் தரத்தக்க அமைப்பு ஆயிற்று; வாண்டையாரும் பட்டக்காரரும் நெடும்பலத்தாரும் சேதுபதியாரும் காங்கிரசிலே சேரமுடிந்தது.
அவர்கள் சேர்ந்ததரால் மக்களின் இதயத்தை வெல்லும் சக்தியைக் காங்கிரஸ் இழந்தது; ஆனால், மக்களிடம் உள்ள ‘ஓட்டுகளை’ மயக்கியோ மிரட்டியோ பெற்றிடும் வலிவினை அந்த வித்தையில் மெத்தத் தேர்ந்தவர்களான அவர்கள் காங்கிரசுக்குக் கொடுத்துள்ளனர்.
இந்தக் கணக்கினை நாம் கவனிக்காமலிருப்பது தவறு; மிகமிகத் தவறு.
பழையகோட்டைப் பட்டக்காரரால், உப்புக்காய்ச்ச முடியவில்லை, சட்டம் மீறமுடியவில்லை, கைராட்டை சுற்ற முடியவில்லை, வரிகொடா இயக்கம் நடத்த முடியவில்லை; ஆனால், அவரால் இன்று, தம்மைப் பெரிய புள்ளி என்றும் பட்டக்காரர் என்றும் விளக்கிக்கொள்வதன் மூலம் ஏற்படும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓட்டுகளைப் பெற்றுத்தந்திட முடிகிறது.
இத்தகையவர்கள் நிரம்ப உளர், இன்றைய காங்கிரசில்; அதன் காரணமாக, இதயத்தைப் பெறமுடியாத நிலையைப் பெற்ற காங்கிரசினால், ஏழையின் ஒட்டு