உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

களைத் தட்டிப் பறித்துக்கொள்ளும் புதிய வலிவினைப் பெறமுடிந்திருக்கிறது.

இதயத்தை வென்றிடும் வல்லமையைக் காங்கிரஸ் இழந்துவிட்டது என்பது மட்டுமல்ல, மக்களின் இதயத்தை வென்றிடும் தன்மை கழகத்திடம் வளர்ந்து கொண்டு வருகிறது.

மக்களின் இதயத்தை வென்றிடும் வல்லமையையோ காங்கிரஸ் இழந்துவிட்டது; மக்களின் இதயத்தை வென்றிடும் நிலையோ கழகத்துக்கு இருக்கிறது, இந்நிலையில் காங்கிரசால் கழகத்தைத் தோற்கடிக்க முடியுமா என்ற எண்ணம் நமக்கு.

இந்த வாதத்தில் தவறு இல்லை; பொருள் இல்லாமற்போகவில்லை, தவறு எங்கே இருக்கிறது என்றால், தேர்தல் களம் என்பது, முழுக்க முழுக்க இதயத்தை வென்றிடும் இடம் என்று நினைத்துக்கொள்வதுதான்.

“சரியல்ல என்று தெரிகிறது என்றாலும் செய்ய வேண்டி இருக்கிறதே”

“நான் என்ன செய்ய! என் நிலைமை அவ்விதம் ஆகிவிட்டது”

“விருப்பத்தோடா நான் ஆதரவு கொடுத்தேன்!”

இவ்விதமான பேச்சைத் தேர்தல் சமயத்திலே கேள்விப் படலாம்,

“அந்தக் கட்சிக்காக அல்ல, நிற்கிறாரே அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்.”

“நிற்கிற ஆள் எனக்குத் தெரியாது, ஆனால், கம்பெனி முதலாளி அவர் பக்கம்; நான் வேறு பக்கம் இருக்க முடியுமா?”