88
உண்டாகிவிடும், அது நம்ம கூட்டுறவுத் தொடர்பையே கெடுத்து விடுமே...”
“எனக்கு என்று ஒரு கட்சி இருக்குதுங்களே.”
“கழகம்! தெரியும்! இப்ப நடக்கப்போற தேர்தலில் கழகமே ஜெயித்தாலும், சர்க்காரா மாறப் போகுது? பொதுத் தேர்தலின் போது எந்தக் கட்சி மெஜாரட்டியாக வருதோ அது சர்க்காரை அமைக்கும். பொதுத் தேர்தலின் போது நீ உன்னுடைய கழகத்துக்கு வேலை செய்து, வெற்றி தேடிக் கொடுத்து, சர்க்கார் அமைத்துக்கொள்; நான் தடுக்கவில்லை; வேண்டாமென்று சொல்லவில்லை. இப்ப நடப்பது இடைத் தேர்தல். இதிலே, எனக்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுத்தா, என்ன கெட்டுவிடும், யோசனை செய்துபாரு! இந்தத் தேர்தலில் என் கட்சி ஜெயித்தால் எனக்கு மதிப்பு—எனக்கு மதிப்பு என்றால், நாம நம்முடைய கூட்டுறவுத் துறையை நம்ம மாவட்டத்திலே மேலும் வளரச் செய்ய முடியும், எவ்வளவோ செய்ய வேண்டி இருக்குது. செய்ய வேண்டுமானால் என் வார்த்தைக்கு மதிப்பு உயர வேண்டும். அது உயர, என்ன வழி? இந்தத் தேர்தலிலே நான் வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். அதனாலேதான் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன், இந்தமுறை கட்சிக்காகப் பிடிவாதம் பிடிக்காதே.”
“எப்படிங்க முடியும். நாலுபேர் என்ன சொல்லுவாங்க.”
“சரி, நீ காங்கிரசுக்கும் வேலை செய்யாதே, கழகத்துக்கும் வேலை செய்யாதே. ஒதுங்கி இருந்து விடு.”
இவ்விதம் மேடையில் பேசமுடியுமா! பேசவேண்டிய இடத்தில் பேசினார் அந்தக் காங்கிரஸ் தலைவர்; கழக இளைஞரும் ஒதுங்கிக் கொண்டதாகக் கேள்வி.
★
இதயத்தை வேலை செய்யவிடாமல் தடுத்திடும் முறைகள், புதிது புதிதாகக் கிடைத்திடும் வேளை, தேர்தல் காலம்.