உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

“உன்னோட கட்சி கொள்கை கொடி எல்லாத்தையும் நீ அடுத்த தடவைக்குப் பார்த்துக்கொள்ளு. இந்தத் தடவை நான் சொல்றபடி செய்துவிடு! காரணம் இருக்குது”

என்று பேசி, தன் மகனை மடக்கிப் போட்டுவிடும் தகப்பனாரைக் காணலாம் தேர்தல் நேரத்தில்.

தர்மபுரித் தேர்தலின்போது ஒரு கிராமம்—நமக்கு ஆதரவான இடம்—அங்கு ஒரு இளைஞர், கழகத்தவர்-நமக்காகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் ஒருநாள், சேலம் மாவட்டத்துக் காங்கிரஸ் தலைவர்களிலே ஒருவர் அவரைச் சந்தித்தார்; கூட்டுறவுத் துறையிலே அவர் பெரியவர்; கழக இளைஞர் கூட்டுறவுத் துறையில் தொடர்புள்ளவர். அந்தத் தொடர்பையே காரணமாகக் காட்டி, அந்தக் காங்கிரஸ் தலைவர், கழக இளைஞரைத் தன் பக்கம் இழுக்கும் தந்திரத்தில் ஈடுபட்டார்,

“என்னப்பா! நாம இருவரும், கூட்டுறவுத் துறையிலே உள்ளவர்கள். நமக்குள்ளே எந்த விதத்திலும் சச்சரவு, பேதம் வரக் கூடாது. கூடிப்பழகி வருபவர்கள்,”

“கூடிப் பழகுவதற்கும் கட்சிக்காக ஓட்டுக் கேட்பதற்கும் என்னங்க சம்பந்தம்? நான் என் கட்சிக்கு வேலை செய்வதும், நீங்க உங்க கட்சிக்கு வேலை செய்வதும், நம்ம இருவருடைய சினேகிதத்தையும் எப்படிங்க பாதிக்கும்.”

“நாம இரண்டுபேரும், வேறு வேறு கட்சி அல்ல. இருவரும் ஒரே கட்சி, கூட்டுறவுக் கட்சி; தெரிகிறதா!”

“கூட்டுறவு ஒரு கட்சியாகுங்களா! எந்தக் கட்சிக்காரரும் அதிலே இருக்கலாமே...”

“இருக்கலாம்; ஒப்புக்கொள்கிறேன்; ஆனா, நாம இருவரும் தேர்தலிலே வேறு வேறு கட்சிக்கு வேலை செய்தா எப்படியும் நமக்குள்ளே பகை