உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

யார் வெற்றி பெற்றால் எங்களுக்கு என்ன? எந்தக் கட்சியினால் எங்களுக்கு என்ன? எங்களுக்கு வேண்டியது மூவாயிரம், கோயில் கோபுரம் கட்டி முடித்தாக வேண்டும். அந்தத் தொகை கொடுப்பவருக்கு இந்தக் கிராமத்து ஓட்டு முழுவதும்

என்று பேரம் பேசிடும் பெரியவர்களைப் பார்க்கலாம் தேர்தல் காலத்தில்,

இப்பத்தானய்யா, நம்ம கிராமத்துக்கு நல்ல காலம் பிறக்கப்போவுது. ஏரி மதகு புதிதாக வேணும் என்று இந்தப் பத்து வருஷமாக முயற்சி செய்கிறோம் அல்லவா! நேற்றுத்தான் அதற்கு வழி பிறந்தது. தாசில்தார் ஒத்துக்கொண்டு விட்டார். நாளைக்கு வருகிறார்கள் அளவு எடுக்க! நம்ம கஷ்டம் தீர்ந்தது.

பரவாயில்லயே, புதுத் தாசில்தார் நல்லவர் போலிருக்கிறது. நம்ம நியாயம் அவருக்குப் புரிந்திருக்குது.

புரியும்படி செய்தாரு கதம்பத்தூராரு...

கதம்பத்தூராருக்கு நம்ம ஏரிமதகுபற்றி என்ன அக்கறை?

அவருக்கு எதுக்காக அக்கறை ஏற்படும்? நான் ஏற்படுத்திவைத்தேன் அந்த அக்கறையை.

அது எப்படி? உன்னோடு பேச்சுக்கு அவர் கட்டுப் படுவானேன்?

அவரோட பேச்சுக்கு நாம கட்டுப்படுவதாக ஒப்புக்கொண்டதாலேதான்...

அது என்ன ஏற்பாடு? விளங்கச் சொல்லேன்!

நம்ம கிராமத்து ஓட்டு அவ்வளவும், அவர் கட்சிக்கு நாம போடணும்; ஒத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

இவ்விதமாகக் கிராமத்துப் பெரியதனக்காரர் ஊர் கூட்டிப் பேசிவிடுவதும் உண்டு, பல இடங்களில்.