உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

காங்கிரசில் தங்களுக்கு இடம் கிடைத்ததும் அதனை எதிர்த்து எதிர்த்து எரிச்சலும் ஏமாற்றமும் கொண்டவர்கள், இது பொன்னான சந்தர்ப்பம் என்று கண்டு கொண்டனர்; எதை எதை, காங்கிரசை எதிர்த்தபோது பெறமுடியாமல் தவித்தார்களோ, அதனையும், அதனைவிட மேலானவற்றையும் காங்கிரசில் இருந்து கொண்டு அவர்களாலே பெறமுடிகிறது என்றால், அவர்களுக்கு காங்கிரஸ் கசக்குமா! அந்தக் காங்கிரசை வலிவுபடுத்துவதும் அவர்களுக்கு நஷ்டமா!

காமராஜர் நல்லவர், பச்சைத் தமிழர். ஆகவே நான் காங்கிரசை ஆதரிக்கிறேன் என்று பெரியார் சொன்னாலும், அவர் காங்கிரசை ஆதரிப்பதற்கான உண்மையான காரணம் எனக்குத் தெரியும்!! எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும்!!!

யாராருக்காகப் பெரியார், வாதாடி, அவர்களின் நிலைமைகளைக் காப்பாற்றக் காங்கிரசுடன் போராடிப் போராடிவந்தாரோ, அவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரசிலே சேர்ந்து எல்லா வாய்ப்புகளையும் பெற்று, நிம்மதியாக, நிலை உயர்ந்து இருக்கக் காண்கிறார். அவர்களுக்கு இந்த இடம் கொடுத்திருப்பதால், காங்கிரசை ஆதரிக்கிறார். வேறு காரணம் யாவும், திறமையான வாதம்! வேறில்லை!

ஒரு உதாரணம் பாரேன்! தஞ்சைத் தரணியில் நெடும் பலம் சாமியப்பாவின் நிலை காப்பாற்றப்பட, அவரை எதிர்த்துவந்த காங்கிரசைப் பெரியார் மிகப் பலமாகத் தாக்கிவந்தார். இப்போது நெடும்பலத்தாரின் திருக்குமாரன் காங்கிரசில் புகுந்து, தந்தை பெற முடியாதனவற்றைக்கூடப் பெற்று ஒளியுடன் விளங்குகிறார். இந்த ஒளி மங்கிவிடக்கூடாது என்பதற்காகப் பெரியார், இப்போது இந்த ஒளியைத் தந்துதவும் காங்கிரசை ஆதரிக்கிறார். எட்டும் எட்டும் பதினாறுதான், பத்தும் ஆறும் பதினாறுதான்; கணக்குவகைதான் வேறு, முடிவு ஒன்று தான்.

பெரிய புள்ளிகளின் கணக்கு எப்போதும் இந்தவிதமாகத்தான். சோடையாக இருப்பதில்லை. காங்கிரசை எதிர்த்தனர், சுவையும் பயனும் கிடைக்கும் காலம் வரையில்—வெள்ளைக்காரன் துணை இருக்கும் வரையில்,