91
பிறகு, காங்கிரசை ஆதரித்து, சுவையும் பயனும் பெறுகின்றனர்.
அவர்கள் இதைப் பெற இழந்தது என்ன? கிளாஸ்கோ மல்லும் சரிகைத் தொப்பியும்! பெற்றது என்ன? மந்திரி வேலை வரையில்! விவரம் தெரியாதவர்களா! அவர்களுக்கே உரிய கணக்குத் திறமையுடன் காரியமாற்றுபவர்கள் இந்தக் கனதனவான்கள்-நடந்த நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வருகிறது.
ஒரு நண்பர்—குறிப்பிடத்தக்க புள்ளி—பஸ் முதலாளி—பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கிளாஸ்கோ மல் வேட்டி உடுத்திக்கொண்டு பாப்ளின் சட்டை போட்டுக் கொண்டு பட்டைக்கரை சரிகை அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு, வந்தார். என்னைக்காண! தெருத்திண்ணையில் உட்கார்ந்தோம் பேச.
முனிசிபாலிடி, பஞ்சாயத்து இவற்றின் உறுப்பினர்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற மேல் அவைக்குச் செல்லும் தேர்தலில் தாம் நிற்க விரும்புவதாகச் சொன்னார்; என் உதவி கேட்டார்.
எனக்கு வேண்டியவர்கள் அந்த அமைப்புகளிலே அதிகம் கிடையாது. அவருக்கும் தெரியும். ஆனாலும், தேர்தல் என்றால் எல்லோரையும் பார்க்கவேண்டுமே! அந்த முறைப்படிப் பார்த்தார் என்று எண்ணுகிறேன்.
நான் சொன்னேன் இந்தவிதமான தேர்தலிலே நிறையச் செலவாகிறதாமே என்று.
அவர் பச்சையாகவே பேச ஆரம்பித்தார்.
எனக்கு ஓட்டுப் போடுபவர்கள், கேட்டால் பணம் கூடத்தர நான் தயார் என்றார்.
எவ்வளவு என்று கொடுக்க முடியும். நிறையச் செலவாகுமே என்றேன்.
உடனே அவர், மளமள வென்று கணக்குப் போட்டுக் காட்டினார்.
இருபதனாயிரம் செலவாகிறது என்றே ஒரு கணக்குக்கு வைத்துக் கொள்ளுவோம். என்ன நஷ்டம் அதனாலே—ஐந்து வருடம் மேல் அவை உறுப்பினராக