9
போலச் சில பண்டிதர்கள் கிளம்பி, யாககுண்டங்களை வெட்டச் செய்தார்கள், டன் டன்னாக விறகும் டின் டின்னாக நெய்யும் கொண்டுவரச் செய்தார்கள், ‘கோஷ்டி கோஷ்டி’யாகக் கிளம்பிச் சென்று வேத பாராயணம் செய்து, வாஜபேய யாகம் செய்தனர்!
யாகம் நடைபெற்ற இடத்திலே, இப்போதும் வெப்பம் இருக்கக் கூடும்—புல்கானின் வருகிறார்.
பூனா நகரில், வாஜபேய யாகம் பிரஜாபதி தேவனுக்காக நடத்தப்பட்டிருக்கிறது
ஏழு நாட்கள் நடைபெற்றன, மூன்று நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த யாகம் நடைபெற்றதில்லையாம்.
நூற்றுக் கணக்கான புரோகிதர்கள், யாக குண்டத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, வேதமந்திரங்களைச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் ‘பூஜை புனஸ்காரம்’ செய்து புண்ணியம் தேடிட, பம்பாய் மாகாண கவர்னர் அரிகிருஷ்ண மேதாப் இந்த யாகத்தின் மேன்மை பற்றித் தமது மேலான கருத்தினைக்கூற, ஆனே எனும் பழம் பெரும் தேச பக்தர், நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அங்கு படுக்கையுடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டு, அவரும் தமது உரையை அருள, இலட்சம் மக்கள் கண்டு கழிபேருவகை பூத்தனர், இந்தத் திங்களில்.
பூனாவில் இந்தப் புண்ய யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நேரு பண்டிதர், என் க்ஷேத்திரம் அணையும் தேக்கமும், தொழிலும் வளமும், என்ற தமது பேச்சை அமிருதசரசில் அளித்துக் கொண்டிருக்கிறார்.
வாஜபேய யாகத்தை முடித்துக்கொண்டு, பாரதத்தின் பழைய காலமுறைப்படி, வேதகால இரதங்கள் ஜோடித்து, பலர் ‘ரிஷிகளாகக்’ காட்சி தந்து, இரத சாரத்யப் பந்தயம் நடத்திக் காட்டினராம் !!’—கடைசி நாளன்று.
இராமனும் கிருஷ்ணனும், சேதி நாட்டரசனும், அவந்தி தேசாதிபதியும், கர்ணனும் சகுனியும், சகாதேவனும் சல்லியனும், அபிமன்யுவும் பிறரும் புயலெனச் செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட இரதங்களிலே சென்றனர் என்று புராணம் படிக்கிறார்களல்லவா—அந்தச் செல்லரித்த ஏடுகளிலே காட்டப்படும் காட்சிகளைக் காண, வேதகால இரதசாரத்யக் காட்சியை ஏற்பாடு செய்து காட்டினர்—பல்லாயிரவர் கண்டனர்—பரவசமடைந்தனர்.
அதேபோது, டில்லிப் பட்டணத்தில் வேறோர் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. புல்கானின் விஜயத்தின்-