42
அனைவரும் ஈடுபட்டு, வழியும் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டும்— அதுதான், திண்டாடும் நமது சகோதரர்களுக்கு நாம் காட்டக்கூடிய அன்பும்—அனுதாபமும்.
கூட கோபுரங்கள்
மாட மாளிகைகள்
வணிகக் கோட்டங்கள்
சினிமாக் கொட்டகைகள்
நடுத்தர மக்கள் இல்லங்கள்
அலுவலகங்கள்
இங்கெல்லாம், ‘ஒரு நாளைய வருமானம் இந்த நிவாரணத்துக்கு என்று ஒதுக்கி, திரட்டி, சர்க்காரிடம் தரும் முயற்சியில் ஆட்சியாளர்களாகியுள்ள கட்சியினரே ! பல்வேறு கட்சித் தோழர்களே ! பணிபுரிய வாரீர் என்று அழைக்கிறோம்.
அமைச்சர்களே ! எல்லா இடங்களிலும் என்று இல்லாவிடினும், சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகர்களில் வீதிகளிலே செல்லுங்கள் ! மக்கள் வேண்டிய மட்டும் பணமும் பண்டமும் அளிப்பர். கடை வீதிகளிலே வாருங்கள் ! ஆடைகளைக் குவிப்போம், அமைச்சர்கள் மட்டுமல்ல, அருளாளர் ஆதீனகர்த்தர்கள், எவரும் இப்பணிக்கு முன் வருதல் வேண்டும் — அனைவரும் மனிதரன்றோ !
கலை உலகத் தோழர்களே ! உமது பணி, இச்சமயம் மிக்க பலனளிக்கும். நிதி திரட்டவும், ஆடைகள் பெறவும், அங்காடிகளிலும் பெருஞ்சாலைகளிலும் அணிவகுத்துச் செல்லுங்கள். பெருநோக்கும் கருணை வழியும் உள்ளமும் கொண்டவர்கள் கலை உலகில் ஏராளமாக உள்ளனர்; எனவே, அவர்தம் முயற்சிக்குப் பலன் நிச்சயம் கிடைக்கும்.
அனைவரும் பணியாற்றித் தீரவேண்டிய கட்டம்.
இன்றே துவக்குக! என்று வேண்டுகிறோம். தி. மு. க. தோழர்களிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்பு கேட்பினும், கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
தேம்பித் திகைத்துக் கிடக்கும் தோழர்களே! உடன் பிறந்தோரே ! இதோ உதவி, இதோ, இதோ என்று கூறிப் புறப்படுக; பணிபுரிக.
ஆமாம், அண்ணா! எல்லாம் சரி, டில்லி என்ன செய்கிறது, என்று கேட்கிறாய், தெரிகிறது, தம்பி ! அதுபற்றி இப்போது எண்ணிக் கிடப்பது வேண்டாம். ஏதேனும் செய்யும். இப்போது என் கண்ணுக்கு டில்லி தெரியவில்லை—வெள்ளம், பிண மலை தெரிகிறது — நீயும் நானும் இருக்கிறோம். நம்மாலானதைச் செய்வோம், உடனே புறப்படு ! ஒரு பிடி அரிசி, தாயே ! ஒரு பிடி அரிசி, என்று கேள். கேள் கொடுக்கப்படும். ஆடை