7
அமெரிக்காவில் உள்ள பாரதப் பிரதிநிதியும், இங்குள்ள நிதி மந்திரியும், ‘ததாஸ்து’ —என்கிறார்கள். அதாவது, அன்னிய நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக இந்த நாட்டை குத்தகைக்கு விடுவதற்குச் சம்மதிக்கிறார்கள்.
அதேபோது, ஆவடித் தீர்மான மூலம், சமதர்மம் அளிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.
இந்த முரண்பாடு சரியா என்று கேட்டாலோ, இதுதான் பாரதப் பண்பாடு, நாங்கள் மிகச் சிரமப்பட்டுக் கண்டறிந்துள்ள ‘சீலம்’ என்றும் பேசுகிறார்கள்.
புல்கானினும் வருகிறார், சவுதி அரேபிய மன்னரும் வருகிறார்; இருவருக்கும் விழா ; இருவரும் குதூகலமடைகிறார்கள் ; இருவருக்கும் நேரு பண்டிதர் நண்பர் !
சவூதி அரேபியா மன்னர் விஜயம் செய்வது தவறு என்று கூறுவதற்காக இவ்விதம் எழுதவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கும் நேர்மையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமலேயே, எவரிடமும் இன்முகம் காட்டி, எதற்கும் இசைவு அளித்துக்கொண்டு செல்லும் போக்கிலே நாடு நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.
கடவுள், மனிதனின் சிருஷ்டி ! மதம், மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட மனமயக்கம். என்று சென்ற திங்கள், மாஸ்கோ ‘ரேடியோ’ தெரிவித்தது என்று இங்குள்ள ஏடுகளெல்லாம் அறிவித்தன!
அந்த நாட்டு புல்கானின் வருகிறார்—அவருக்குக் கல்கத்தாவில் இராமாயணம் நிழல் நாடகமாக உதயசங்கர் நடனக்குழுவினரால் நடத்திக் காட்டப்பட ஏற்பாடாகி இருக்கிறது.
ஒரு பெரும் தலைவருக்கு பொழுதுபோக்குக்காக நடத்திக் காட்டப்படும் ‘காட்சி’யைப்பற்றி, நான் வலிந்து பொருள் கொள்வதாகக் கருதாதீர்கள். காரணமின்றி அல்ல, இராமாயணம் காட்டப்படுவது!
காளிதாசரின் ‘சாகுந்தலம்’ காட்டப்பட்டால், இளங்கோவின் சிலப்பதிகாரம் காட்டப்பட்டால், இதுபோல் ஒவ்வோர் மொழியிலும் உள்ள கலை ஓவியங்கள் காட்டப்பட்டால், வெளிநாட்டுத் தலைவருக்கு இந்நாட்டுக் கலைக்காட்சி நடத்திக் காட்டப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம். நடத்தப் படுவது இராமாயணம்!
இது போலவேதான், ‘பாரதப் பண்பாடு’ பல்வேறு முனைகளிலும் தலைவிரித்தாடுகிறது.
டில்லிப் பட்டணத்தில், ஆசியா கண்டத்திலேயே இதுவரை இப்படிப்பட்ட ஓர் பிரம்மாண்டமான காட்சி நடத்தப்-