92
‘கேட்பதும் கிடைப்பதும்’ என்ற தலைப்புடன், சிங்கைத் தோழர் உலகநாதன் என்பார் தந்துள்ள கவிதையின் பகுதி, செல்வவானின் போக்கை நன்கு எடுத்துக் காட்டுகிறது என்பதனால் அதனைத் தருகிறேன்.
“வாழ்வில்லை வளமில்லை
வலிவில்லை செழிப்பில்லை
சூழ்தொல்லை சிறிதில்லை
சுகமில்லை நலமில்லை” என்றால்
மரமுண்டு கயிறுண்டு
மரணத்தில் சுகமுண்டு
பிறகென்ன துயருண்டு?
பேசாதே போவென்று சொல்வார்—இவர்
கூசாமல் சாவென்று சொல்வார்—இங்கே
வாழ்வுக்கு வழிகேட்டால்
சாவுக்கு வழி காட்டிச் செல்வார்!
அவர்கள் கிடக்கட்டும் தம்பி! இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைக்கவில்லையே அம்மா என்று உழவன் கூறுவதாக நான் ‘ஓரிரவு’ என்ற கதையில் எடுத்துக் காட்டினேன், ஆண்டு பலவற்றுக்கு முன்பு. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் காமராஜருமா அப்படி இருக்கவேண்டும்.
இதென்ன புதிதா? மிக மிகப் பழையது! பலன் தருவதா? இல்லை! உபதேசக் குவியலுடன் சேர்த்துவைக்கத்தக்கது! அதைத்தான் தரமுடிகிறது அவரால்! அதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
தம்பி துவக்கத்தில் காட்டினேனே புலவர் கேள்வி, அதனை மறுபடியும் படித்துப் பார்!
ஒருவர்மீது ஒருவருக்குக் காரணமற்றுக் கோபம் வருகிறது அரசே! அதற்கு என்ன காரணம்? என்றல்லவா புலவர் கேட்டார். அதற்கு இதயம் படைத்த மன்னன்