உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

கண்கள்! கெம்பீர நடை! மாளிகையை அலட்சியமாகப் பார்க்கிறார். ஏதோ கீதம் கேட்கிறது உள்ளேயிருந்து.

ஜெய! ஜெய! வந்தேமாதரம்
ஜெய ஜெய வந்தேமாதரம்!

என்ற கீதம் கேட்டதும், சீமான், மறுபடி, சற்று உன்னிப்பாக மாளிகையைப் பார்க்கிறார். பெரிய அளவினதாகவும், விழாக் கோலத்துடனும் மாளிகை இருக்கக்கண்டு, மேலும் உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். சீமானின் பார்வை மாளிகைமீது வீழ்வது கண்ட காவலாளி, முகமலர்ச்சியுடன், வரவேற்கிறான்.

காவ : நமஸ்தே!

சீமான்: நமஸ்த்தே...

காவ : வாருங்கள்!

(வரவேற்றுக்கொண்டே சந்தனம், தருகிறான். அதைத் தொட்டதும் தொடாததுமாக)

சீ : சந்தனக்கட்டை இங்கு ஏராளமாகக் கிடைக்குமோ?

கா : நிறையக் கிடைக்கும்.

சீ : இதை இப்படி அறைப்பது தவிர வேறு, என்ன செய்கிறீர்கள்!

கா : அறைக்கிறோம்—யாராவது பெரியவர்கள் இறந்துவிட்டால், அவர்களை எரிக்க இதை உபயோகிக்கிறோம் – கொஞ்சம் தைலம் – சோப்...

சீ : (பயந்து) தைலம், சோப் செய்கிறீர்களா!

கா : ஆமாம், கொஞ்சம் – அதிகமல்ல.

சீ : அதிகமில்லையா! சரி, இந்த மாளிகையை ஏன் ரிப்பேர் செய்யக்கூடாது?

கா : செய்யவேண்டும். செய்யப் போகிறார்கள். உள்ளே போய்ப் பாருங்கள், அங்கே அதைப்பற்றித் தான் பேசுகிறார்கள்.

சீ : பேசுகிறார்களா? யார்?

கா : மாளிகைக்குச் சொந்தக்காரர்கள்!

(சீமான் வேகமாக உள்ளே போகிறார்)