116
விடம் இந்தியா அதிக அளவிலே கடனும் – உதவியும்—பெற்றுக் கொள்வது எதிர்கால ஆபத்தாகி விடக்கூடும் என்ற எண்ணத்தை, இன்று நேற்றல்ல, கம்யூனிஸ்டு கட்சியின் தோழமைத் தொடர்பு ஏற்பட்ட பிறகு அல்ல, துவக்க முதலே கூறி வந்திருக்கிறோம். அமெரிக்காவின் தொடர்பை, கம்யூனிஸ்டு கட்சி எதிர்க்கிறது, நாங்கள் கம்யூனிஸ்டு கட்சியுடன் தோழமை கொண்டிருக்கிறோம், ஆகவேதான் அமெரிக்கத் தொடர்பைக் கண்டிக்கிறோம் என்று வாதாடுவது தவறு “—என்று நான் விளக்கமளித்துவிட்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் துவக்க நாளிலேயே நான் கண்டித்து இதழிலே எழுதிய ஒரு கட்டுரையை –கதை வடிவம் – தந்து படிக்கச் சொன்னேன். தம்பி! அதனை உன்னிடமும் தருகிறேன்—நமது போக்கு புதிது அல்ல என்பதனை எடுத்துக்காட்ட.
காட்சி-1
இடம் : கொஞ்சம் கலனான ஓர் மாளிகை வெளிப்புறம்
காலம் : காலை
உறுப்பினர் : வாயில் காப்போன், ஒரு சீமான்
மாளிகை கலனாகி இருக்கிறது! சுற்றுச் சுவர், இருபுறமும் பிளக்கப்பட்டுக் கிடக்கிறது. நெடு நாட்களாக, கண்ணாம்பு அடிக்காததாலும், பழுது பார்க்காததாலும், மாளிகையின் வெளித்தோற்றம், கவர்ச்சி அளிப்பதாக இல்லை; வாயிற்படி, தெருத்திண்ணை இவைகளின் மீதெல்லாம், புழுதியும் கற்களும் நிரம்பியுள்ளன. ஆனால் மாளிகை, பெரிய அளவுடையது. பழுதுபார்த்து, வர்ண வேலைகள் செய்து முடித்தால், அழகாக விளங்கக்கூடியது என்று தெரியும் நிலை இருக்கிறது.
மாளிகையின் முன் வாயிற்படியில், ஒரு காவலாளி களிப்புடன் நிற்கிறான், கையில் சந்தனக் கிண்ணமும் பன்னீர் செம்பும் வைத்துக்கொண்டு. மாவிலைத் தோரணங்கள், வாழைமரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ஒருபுறம் முட்செடிகள் உள்ளன.
வீதி வழியாக, ஒரு சீமான் செல்கிறார். பருத்த உடல்! மலர்ந்த முகம்! எதையும் ஊடுருவிக் காணக்கூடிய