130
கிளிகளெனக் கருதிக் கொண்டனர் மக்கள் – நயவஞ்சகர்கள் பலர், அந்தச் சின்னத்தைப் பொறித்துக்கொண்டு, நாடாளும் வாய்ப்பைப் பெற்றனர்! கிளிக்கென இருந்த பொந்துக்குள் கருநாகம் குடிபுகுந்த கதை போலாயிற்று! நல்லாட்சி முறை பற்றிய அக்கறை அடியோடு அழியலாயிற்று. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள், கதர் உள்ள போதே தேடிக்கொள் என்று இலாப வேட்டை ஆடக்கிளம்பிவிட்டனர்.
வாய்ப்பைப் பெற்ற இதிலே, யானையிடம் மாலையைக்கொடுத்து, அது யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரை அரசனாகக்கொண்டு அந்த அரசனை ஆண்டவனுக்கு அடுத்தபடி என்று நம்பி அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற விதமான அரசியல் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் உள்ளனர், அமெரிக்க நாட்டு அரசியல் முறையைத் திருத்தி ஆஸ்திரேலிய நாட்டு ஆட்சி முறையில் ஒரு பகுதியைப் புகுத்தி, சோவியத் முறையைச் சிறிதளவு கலந்து, பிரிட்டிஷ் பிடிவாதத்தையும் பிரன்ச்சுப் பசப்பையும் சம எடையாகக் கலந்து புகுத்தி, அதே போது “இந்தியப் பண்பாட்டை” இழந்துவிடாதபடியும் பார்த்துக் கொள்ளும் விதமான அரசியல் தத்துவத்தை நாடுபவர்களும் இருக்கிறார்கள். ஊராட்சி அமைப்புகள் ஒழிய வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஒழியக் கூடாது மேலும் அதிகமான அதிகாரம் அளித்து அமைக்க வேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள். அரிசியைத் தீட்டிச் சாப்பிட வேண்டும் என்பார் உண்டு! தீட்டுவது தீது என்பாரும் உண்டு, ஆலைகள் வேண்டாம் என்பார் உளர்! விவாகவிடுதலை என்ற பேச்சே நாசகாலத்தால் ஏற்படும் விபரீதபுத்தியின் விளைவு என்றுபேசுபவர் உண்டு! தசரதனைக் காட்டி, ‘ஏகதாரம்’ என்ற கட்டுப்பாடு கூடாது என்று வாதிடும் பேர்வழிகள் உண்டு, அவர் மகன் ராமன் மீது ஆணையிட்டு ‘ஏகதாரம்’ எனும் முறைதான் சட்டமாக வேண்டும் என்று கூறுவோர் உண்டு! ஜான்சி ராணியை சாட்சிக்கு அழைக்கும் வீரர்களும், சாவித்திரியைச் சாட்சிக்கு அழைக்கும் பக்தர்களும் புதுமை விரும்பிகளும் பழமைக்கொள்கையினரும், சகல வகையினரும் கொண்டதாகிவிட்டது, காங்கிரசுக் கட்சி. ஆகவே, அதன் ஆட்சிக்கு உட்பட்ட நாடு, என்ன உருவம் பெறும், என்று எவ்வளவு பெரிய நிபுணராலும் கணிக்கமுடியாத நிலை