உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்கள் பாதுகாப்பாக வாழ விரும்புபவர்கள்; இருப்பதை இழந்துவிட விரும்பமாட்டார்கள். ஆனால், பொருளாதார நிலைமை கெட்டு, அன்றாட வாழ்க்கையில் நலிவு வளர்ந்து, வாழ்வே ஒரு சுமை என்று ஆகிப்போய்விடுமானால், வலிவற்றவர்களும், நடப்பது நடக்கட்டும் என்று துணிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.

இன்று நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இந்த நிலைமைக்குத் துரத்தப் படுகின்றார்கள்! நடப்பது நடக்கட்டும்!— என்று துணிந்துவிடும் நிலைமைக்கு. இதை உணராமல், மக்களைச் சிலர் தூண்டிவிடுகிறார்கள் என்று பேசி வருகின்றார்கள் ஆளவந்தார்கள்.

இவர்கள் கருத்துக் குருடர்கள், அறிவற்றவர்கள் என்று கண்டித்திருக்கிறார்.

யார்? பண்டித ஐவஹர்லால் நேருவேதான். அவர் எப்போதோ உணர்ச்சி வயப்பட்டுப் பேசிவிட்டஆவேசப்பேச்சு அல்ல; நாடு அறியட்டும், உலகம் உணரட்டும், வழிவழி வந்திடுவோர் பாடம் பெறட்டும் என்ற நோக்கத்துடன் உலக வரலாறு எனும் தமது நூலிலே எழுதி இருக்கிறார்.

நேருவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு, தம்பி! நான் இதனை நினைவுபடுத்தவேண்டி வருகிறது! என்ன செய்வது!!

Ideas and economic conditions make revolutions. Foolish people in authority, blind to everything that does not fit in with their ideas, imagine that revolutions are caused by agitations. Agitators are people who are dis-contented with existing conditions and desire a change and work for it. But tens and hundreds of thousands of people do not move to action merely at the bidding of an agitator. Most people desire security above everything else, thay do not want to risk losing what they have got. But when economic