22
கண்டிப்பதில், கேலி செய்வதில், இதழ்கள் பலவும் ஈடுபட்டுள்ளன; ஆர்வத்துடன்.
ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து அன்றாட நிர்வாகத்திலே நெளியும் ஊழல்கள் வரையில், ஆளுங்கட்சிக்குள் நெளியும் அலங்கோலங்கள் உட்பட கண்டிக்கப்படுகின்றன, இதழ்கள் பலவற்றாலும்.
ஆனால், தாம் வலியுறுத்தும் பிரச்சினைகள், அளித்திடும் விளக்கங்கள், தந்திடும் அறிவுரைகள், விடுத்திடும் எச்சரிக்கைகள், துளியேனும், ஆட்சியின் போக்கை மாற்றிடுவதில் வெற்றி தந்துள்ளனவா என்ற கணக்குப் பார்க்கின்றனரா, இதழ் நடாத்துவோர் என்றால் இல்லை; வேறு கணக்குத்தான் பார்த்துக் கொள்கின்றனர்.
கண்டனத்தைக் கொட்டுகின்றனர், காரணங்களை அடுக்கிக் காட்டுகின்றனர், வாதங்களைத் திறமையாகச் செய்கின்றனர். ஆனால், வழக்கிலே வெற்றி கிட்டிற்றா என்பதுபற்றி மட்டும் பார்த்திட முனைவதில்லை. ஏன்? அவர்கள் இதழ் நடாத்துகிறார்கள்; ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திடும் இயக்கம் நடத்தவில்லை. அவர்களிலே சிலர் தமது திறமையை விளக்குகிறார்கள், தீமையை ஒழித்திடும் செயலில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாமலேயே! அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி நிம்மதியாகச் சிந்திக்கவும், நேர்த்தியாக விளக்கிடவும் தகுதி பெற்றவர்கள்; நிலைமையை மாற்றிட வேண்டும் என்ற மனத்திண்மை கொள்பவர்கள் அல்லர்.
கழக ஏடுகள் அவ்விதமானவை அல்ல.
அந்த ஏடுகள், கழகம் பெற்றுள்ள படைக்கலன்கள்.
கழகமோ, ஆட்சியின் அக்கிரமத்தை ஒழித்திட அறப்போர் மேற்கொண்டுள்ள பாசறை.
ஆகவேதான் கழக ஏடுகளில் பிரச்சினைகள் விளக்கப்படுவது மட்டுமல்ல, சிக்கல்கள் போக்கிட வழி கூறப்படுகிறது; அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டப்படுகின்றன; குறிக்கோள் எடுத்துக் காட்டப்படுகிறது.
ஆகவே, நல்லாட்சி காணவேண்டும் என்பதற்கான ஆர்வம் கொண்டோர் எவரும்; அதற்கான இயக்கம் அளித்-