30
உன்னோட கொழந்தையை, நீ, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போய்த் திரும்பற வரைக்கும், பார்த்துக் கொள்ளவா மாட்டாங்க உன்னோட பங்காளிங்க...?
விவரம் தெரியாமப் பேசறே. அந்தப் பங்காளிங்க—என் கொழந்தை பொறந்ததிலே இருந்து, சபிச்சுக் கொட்டிகிட்டு இருப்பவங்களாச்சே–உனக்குத் தெரியாதா? விளக்கேத்திக் கும்பிட்டாங்க, கொழந்தை மாந்தத்திலே போயிடாதா, மாரிக்குப் பலியாயிடாதான்னு எல்லாம்...
செச்சே! கொழந்தைன்னா கொடியவங்களெல்லாம் கூடக் கொண்டாடுவாங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்களே...
இது, எல்லாக் கொழந்தையும் போல இல்லா, அதைத் தெரிஞ்சுக்கோ முதலிலே. இது அரசாளப் பிறந்தது, ஆமாம். பூவாகிக் காயாகிக் கனியாக வேணும். அதைப் பாதுகாத்து, வளரச் செய்தா, நாங்க இழந்து விட்ட செல்வத்தை மீட்டுக் கொண்டுவந்து எங்களோட, குலம் விளங்க வழி செய்து வைக்கும், அப்பேற்பட்ட கொழந்தை இது.
இருக்கட்டும். அதனாலே என்ன? பங்காளிங்க என்ன அதைக் கடிச்சித் தின்னுப் போடுவாங்களா? கையைக் காலை ஒடிச்சீப் போடுவாங்களா...
கால் அரைக்கு வித்துப் போடுவாங்க, வெளியூரானுக்கு காணாமப் போயிட்டுது, தேடாத இடமில்லே, சுத்தாத தெருவு இல்லே; கொழந்தையைக் காணோம்னு நீலிக் கண்ணீர் வடிச்சி, கதையை முடிச்சிடுவாங்க.
பைத்தியம் உனக்கு; கொழந்தையைக் கொடுமை செய்ய யாருக்கும் மனசு வராது...
அப்படியா சொல்றே?..... நெஜமா, நம்பிக்கையோட வா சொல்றே...
சத்யப் பிரமாணமாச் சொல்றேன், கொழந்தைக்கு ஒரு கெடுதியும் வராது. நான் பார்த்துக் கொள்றேன்; நீ பயமில்லாமல் போய் வா.
உன்னோட தைரியத்திலேதான், போக முடிவு செய்யறேன். கொழந்தைக்கு ஒரு கெடுதலும் வராதபடி பார்த்துக் கொள்ளு. தீ மிதிக்கிற திருவிழா முடிஞ்சி, நான்