உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சிறுவர்களுக்கான பாடப் புத்தகத்தில், ‘ராஜபக்தி’க்கான பாடம் ஒன்று உண்டு;

இதோ நமது ராஜா. இவர் மிக நல்லவர்!

இதுதான் பாடம்! ஒரு ராஜாபோய், வேறோர் ராஜா பட்டத்துக்சூ வந்திடின், பழைய படம் எடுக்கப்பட்டு, புதிய ராஜாவின் படம் போடப்படும், படம்தான் மாறும்! பாடம் அப்படியேதான் இருக்கும்.

இதோ நமது ராஜா, இவர் மிக நல்லவர்!

இதற்கு ஒப்பான அரசியல் நடத்துபவர்கள் மொழிந்திடும் புகழுரை கேட்டு மயங்கியா, இந்தப் பூலோகமே தன் காலடியில் பந்தாகிக் கிடக்கிறது என்று மயக்கம் கொண்டுவிடுவது! நல்லது செய்யாதே அந்த மயக்கம்!

மரண அடி கொடுப்பேன் என்று பேசுகிறோமே; கேட்டிடும் குட்டிக் குபேரர்கள் கைதட்டி மகிழ்ச்சி காட்டுகிறார்களே; பிறகு அவர்கள் சிந்திக்க மாட்டார்களா, எந்தவிதமான வசதியுமில்லாமல், எல்லா முனைகளின் எதிர்ப்பையும் தாங்கிக்கொண்டு இந்தக் கழகம் இவ்வளவு வளர்ந்திருக்கிறதே; இப்போது மரண அடி கொடுப்பேன் என்று பேசிடும் பெரியவர், முன்பு பலமுறை கழகத்தை ஒழித்துக் கட்டுவதாகச் சொன்னவர்தானே; செய்தாரில்லையே; இப்போது மட்டும் எப்படிச் செய்வார் என்று யோசிக்க மாட்டார்களா; யோசித்திடும்போது நமது பேச்சு வெறும் உருட்டல் மிரட்டல்தான் என்பது புரிந்து விடாதா— என்றெல்லாம் காமராஜர் எண்ணிப் பார்க்க மாட்டாரா? நேரம் இல்லை பாவம், அவர் என்ன செய்வார்! சூழ்ந்து கொண்டுள்ள ‘சூடமேந்திகள்’ அவருடைய சிந்திக்கும் சக்தியை பொசுக்கிவிடுகின்றனர்.

தம்பி! 1962ம் ஆண்டுக்கும் 1967 பிறக்கப் போகிற கட்டமான இப்போதைக்கும் இடையில் காங்கிரசுக் கட்சிக்குத்தானாகட்டும், காமராஐப் பெரியவருக்குத் தானாகட்டும், கழகத்துக்கு மரண அடி கொடுக்கத்தக்க விதமான புதிய வலிவு என்ன கிடைத்துவிட்டது என்பது எப்போதாவது, எங்கேயாவது, எவராலாவது விளக்கப்பட்டுக் கேட்டதுண்டா?

1962–ம் ஆண்டு காங்கிரஸ் சில இடங்களிலே தோற்றதற்கும், எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்திலே வெற்றி பெற்றதற்கும் காரணம்,