உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

அவர் அளவுக்கு ஆத்திரப்படாதவர்கள், ‘ஐயோ பாவம்’ என்று பச்சாதாபப்பட்டு, சிலர் ஓட்டுப்போட்டு விட்டார்கள். அடுத்து கழகம் என்ன கதியாகிறது என்பதை, மழைக்காலத்துக் காளான் சூரிய வெப்பம் பட்டதும் கருகிப் போவதுபோல, இருக்குமிடம் தெரியாமல் ஒழிந்து போய்விடும் என்று ஆரூடம் கணித்தார்கள்.

ஆனால், பொதுமக்கள் இரண்டாவது முறை கழகத்தை மேலும் அதிக அளவு ஆதரித்து 34 இலட்சம் வாக்குகளை வழங்கினர்.

இவ்விதம் இருமுறை மக்கள் கழகத்தை ஆதரித்தும் பெற வேண்டிய தெளிவைப் பெறாமல், இந்த முறை பாருங்கள்! மரண அடி கொடுக்கிறேன்!!—என்று பேசுகிறார் காமராஜர்.

“பெரியவர்” என்ற புதிய பட்டம் சூட்டி இருக்கிறார்கள், அவருக்கு. ‘பெரியவர்’ ஆனது இதற்குத்தானா?

கூட இருந்து கும்மி கொட்டுபவர்களின் ‘கோவிந்தா’ கோஷம் இப்படியுமா அவரைப் பாழ்படுத்தி விடுவது?

பாரினில் இவர்போல் யாம் கண்டதில்லை—என்று அவர்கள் பாடிடும் பஜனை கேட்டா இவ்வளவு மயக்கம் இவருக்கு ஏற்பட்டு விடுவது!

ஆத்தி சூடி தெரியுமா ஐயா! என்று இவரைக் கேட்டவர்கள்தான் இன்று அகில உலகில் இவர்போல் ஒரு தலைவர் இல்லை! என்று அர்ச்சிக்கிறார்கள் என்பதை இவர் அறியாரா?

எதனையும் சகித்துக் கொள்வேன், ஆனால், என் தலைவன்மீது ஒரு துளி எச்சில் துப்பினாலும், விடமாட்டேன் ஒழித்திடுவேன் என்று இன்று பேசிடும்

‘பக்தர்’கள், என்னைத் தமது தலைவன் என்று கொண்டிருந்தபோது, எவனாவது எங்கள் அண்ணன்மீது வசை உமிழ்ந்தால் “பாதக் குறடெடுத்து பன்னூறு அடி அடிப்பேன்” என்று பாடினவர்கள் என்பதை அறியாரா?