46
சரி! கோபம் கொண்டதற்கான காரணம்கூட கிடக்கட்டும்; மரண அடி கொடுக்கிறேன் என்கிறாரே அதற்குத் தேவையான ‘வலிவு’ உள்ளபடி இருக்கிறதா? இருந்திருந்தால் கழகம் இந்த வளர்ச்சி பெற்றபோது, என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
கழகமா! அதற்குச் செல்வாக்கா! எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள். கூட்டத்திற்கு ஆள் சேருகிறதே அதைப்பார்த்தா? பைத்தியக்காரன் பின்னாலே கூடத்தான் பத்து பேர் செல்கிறார்கள்; வேடிக்கை பார்க்க! அந்தக் கும்பலைக் கண்டு, அவனுக்குப் பெரிய செல்வாக்கு என்று பேசிப் பார்த்தார் பேட்டைப் பெரியவர் கோட்டையிலே கொலுவிருக்கிறோம் என்ற துணிச்சலால்.
தெருக்கோடியிலே பிச்சைக்காரன் இனிமையாகப் பாடினால், அவனைச் சுற்றி ஒரு கூட்டம் சேரும்; காசுகள்கூடப் போடுவார்கள்! அதனால் அந்தப் பிச்சைக்காரன் பெரிய மனிதனாகிவிடுவானா என்று கேட்டார் விருதுநகர் வல்லவர்.ஆனால், பொதுமக்கள் இத்தகைய பொறுப்பற்ற முறையிலே நினைக்கவில்லை; கழகத்தை ஆதரிக்கலாயினர்.
என்று கேட்டுக் கெக்கலி செய்தார் காமராஜர். கழகம் ‘ஓட்டு’ கேட்டது. பொதுமக்கள் முதல் முறை 1,628,598 ஒட்டுகளை வழங்கினர்.
வெட்ட வெளியோடு சரி, இவர்களை எவனாவது சட்டசபைக்கு அனுப்பி வைப்பானா? என்று பேசியவர்கள், பொதுமக்கள் கழகத்துக்குத் தந்த ஆதரவின் கணக்குத் தெரிந்த பிறகாகிலும், ஜனநாயகப்பண்பின்படி, கழகத்துக்கு உரிய மதிப்பு அளித்திட முன்வந்தனரா? இல்லை!
கண்டபடி எழுதுகிறார்கள் கழகத்துக்காரர்கள்.
இவர்கள் கை கட்டை விரலை வெட்டி விடுவேன்!!என்று பேசினார், கண்ணியம் மிக்க காமராஜர்.