உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிக் கடிதம்: 81

படமாம் படம்!


★ காங்கிரசு எடுக்கப்போகும் படம்
   கழகத்துக்கும் சேர்த்துத்தான்!
★ புகழ்ந்தவர்களே புதைக்கவும் செய்வர்!
★ ஏழையர் இதயத்தில் என் சொல் பதிகிறது!
★ உணவு உண்டு வாழ்ந்திடலாம்!
   புகழ் புசித்து வாழ்ந்திட முடியுமா?

தம்பி,

படம் எடுக்கப் போகிறார்களாம்—ஒன்று அல்ல மூன்று! “உண்டானபோது கோடான கோடி” என்று பழமொழி சொல்லுவார்களல்லவா, அது போலச் செல்வமும் செல்வவான்களின் ஆதரவும் இருக்கும்போது மூன்றா, முப்பது படம்கூட எடுக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! படமுதலாளிகளின் பார்வை குளிர்ச்சியாக இருக்கும்போதே, படங்களை ‘மளமள’வென்று எடுத்துவிட வேண்டியதுதானே!! செய்யப் போகிறார்கள்! அறிவித்து விட்டார்கள். சென்னையில் உள்ள மூன்று படப்பிடிப்புத்துறை முதலாளிகள், காங்கிரஸ் கட்சிக்காகத் தேர்தல் பிரசாரப் படம் தயாரித்துத்தர முன் வந்துள்ளார்கள்!

சினிமாக் கட்சி, சினிமாக் கட்சி என்று நமக்குப் பெயர் தம்பி! — பெயரா? — ஏளனப் பேச்சு வீச்சு— ஆனால், நாமல்ல, காங்கிரசுதான் சினிமாப் படங்களைத் துணை-