57
யாகப் பெறப்போகிறது—நடிக நடிகையர்—படப்பிடிப்புத் துறைத் தொழில் நிபுணர்கள் தயாரிக்கப் போகும் படங்கள் அல்ல—மூன்று வளமான படப்பிடிப்பு அமைப்புகள் தயாரிக்கப்போகும் படங்கள்!
முதலாளிகள் தயாரிக்கும் படங்களா? என்று முகத்தைச் சுளித்துக்கொள்ளாதே! தம்பி! சோஷியலிசத்துக்கு ஆதரவான படமாகத்தான் எடுக்கப் போகிறார்கள்!
முதலாளிகளை ஒழிப்போம்! தொழிலாளிகளை வாழ வைப்போம்!— என்ற ஊர்வலக் காட்சியைக்கூடக் காணக் கூடும். படம், தம்பி! படம்!
பணம்! அண்ணா! பணம்!!—என்று நீ கூறுவது என் காதிலே விழத்தான் செய்கிறது. ஆனால், எனக்கு இதிலே உள்ள மகிழ்ச்சிக்குக் காரணம் தெரியுமா? சினிமாவைக் கேவலமாகவும், சினிமாத்துறையினருடன் தோழமைத் தொடர்பு கொள்வதை இழிவானதாகவும், தரக்குறைவான அரசியல் கட்சிகளே அப்படிப்பட்ட தொடர்பு கொள்ளும் எனக் கூறிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது கலை உலகின் தயவைப்பெற இருக்கிறதே, அது கலை உலகின் வெற்றி! கலைஞர்களின் வெற்றி! என் பாராட்டுதல் அந்தக் கலைஞர்களுக்கு. என்னையும் கழகத்தையும் எதிர்க்கும் கலைஞர்களுக்குக் கூட! ‘இருமல் தும்மல்’ எல்லாம் என்னை ஏசும்போது, கலை உலகினர் நாலு வார்த்தை என்னையும் கழகத்தையும் ஏசிப் பேசுவதாலா எனக்கு எரிச்சல் வரப்போகிறது? இராகம் — தாளம் — பாவம் குறையாத பேச்சாகவாவது இருக்குமல்லவா!
சினிமாக் கட்சி, சினிமாக் கட்சி என்று நமது கழகத்தை, ஏ! அப்பா! அங்கு இடம் கிடைக்காத எரிச்சல் கொண்டதுகளெல்லாம் முன்பு பேசுவார்களே! அவர் முழக்கத்தில் சரிபாதி இதுபற்றித்தானே! இப்போது? எப்படிப் பேச முடியும்? ஆகவே, தம்பி! நன்றாக ஆராய்ந்து பார்த்திடின், காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துள்ள கலைஞர்கள் நம்மீது அந்தக் கட்சி பூசிவைத்த கறையைத் துடைத்திடும் தொண்டாற்றி, கழகத்துக்குத் தான் நல்லது செய்கிறார்கள்! அதனால்தான், நான் எங்கிருந்தாலும் வாழ்க!—என்று உளமாரக் கூறி வருவது.