உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

விட்டால் மட்டும் போதும், அது என்றென்றும் அவர்களை ‘வல்லவர்களாக’ வைத்திருக்கும் என்று கூறிவிடவும் முடியாது.

சந்தனம், பூசிக்கொள்ளப் பயன்படும், தாகவிடாய் தீர்க்க அல்ல.

கடுகு, தாளிக்கப் பயன்படும், அதனையே தின்று கொண்டிருக்க முடியாது.

பெருங்காயம், குழம்புக்கு மணமளிக்கும்; அதனையே கரைத்துக் குடித்துக் கொண்டிருக்க முடியாது.

ஆனால், காங்கிரசார், காமராஜரின் புகழ் பாடினால் போதும், மக்கள் தமது மனக்குறை எல்லாம் தீர்ந்து போய் விட்டதாகக் கருதிக்கொள்வார்கள் என்று நம்புகிறார்கள்.

அவருக்கே அந்த நம்பிக்கை வந்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள்!

புகழ் பொழியப் பொழிய, ஒருவிதமான மனமயக்கம், புகழ் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுவிடும். ஏற்பட்டுவிடும் போது அவர்கள் தம்மைப் பற்றிப் போடும் கணக்கு, நாளாவட்டத்தில்—உடனே அல்ல—பொய்த்துப் போகும். அதிலும், பலனை எதிர்பார்த்து, செய்யப்படும் அர்ச்சனைக்கு மயங்கிவிடுவது மிகவும் ஆபத்தை மூட்டிவிடக் கூடும்.

அதனால் தான் ஆன்றோர் ஒருவர், கழுகு பிணத்தைத்தான் கொத்தித் தின்னும், ‘முகஸ்துதி’ செய்பவர்கள் உயிருடன் இருக்கும்போதே கொத்தித் தின்பார்கள் என்று கூறி, எச்சரித்தார்.

நெடுங்காலத்திற்குப் பிறகு, தமக்குக் கிடைத்துள்ள ‘புகழ்’ ‘நிலை’ செல்வாக்கு காமராஜருக்கு, ஒரு மயக்கத்தைத் தந்திருக்கிறது என்பது, அவருடைய பேச்சிலேயே தெரிகிறது; எதிர்க்கட்சிகளை ஏசுவதிலும், மக்கள் படும் இன்னலைப்பற்றி அக்கறையற்றுப் பேசுவதிலும், புரிகிறது. இந்த நிலையை அவருடைய கட்சியே எத்தனை நாளைக்குத் தாங்கிக்கொள்ளப் போகிறது என்பது, அலட்சியப் படுத்த முடியாத ஒரு கேள்வியாகும், இவர்மீது பொழியப் படுவதைக் காட்டிலும் மிக அதிகமான அளவு புகழ் பொழி-