உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டவர் ஒருவர் வந்து பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பிரச்சினை எழுந்தது. நான் சொன்னேள்,

எங்கள் நாட்டில் இப்படி ஒருவரைப் புகழ் பாடி பூஜிக்கும் பழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஆனால், அதே மக்கள் தங்கள் இன்னல் போகவில்லை என்று தெரியும்போது ‘பூஜா விக்ரஹங்களை’த் தூக்கிப் போட்டுவிடுவார்கள். இதுவும் நெடுங்காலமாக இங்கு இருந்து வருவதுதான் என்று கூறினேன்.

தம்பி! நேருவைப் போலக் காமராஜரை வடிவம் கொள்ளச் செய்திடுவோம்; அந்த வடிவத்தைக் கண்டு, மக்கள் மயங்கிடும் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஓட்டுகளைப் பறித்துக் கொள்வோம் என்று கருதுகின்றனர்.

நெடுங்காலமாக யாராவது ஒரு வடநாட்டுக்காரரே பெருந்தலைவராக—உற்சவ மூர்த்தியாக—இருந்து வருகிறார் என்பதிலே தென்னாட்டவருக்கு இயல்பாகவே இருந்துவரும் மனக்குறையை காம்ராஜரை அகில இந்தியப் பெருந்தலைவர் ஆக்குவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம் என்ற ஆசைகூட உலவிக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு தலைவரின் புகழ் பாடி, ஒரு கட்சியோ, அதனால் நடத்தப்படும் ஆட்சியோ, மக்களுக்கு என்றென்றும் மயக்கத்தை ஊட்டிட முடியாது

சுகர்ணோவின் புகழ் பாடப்பட்டதை விடவா!

கனா நாட்டு அதிபர் நிக்ரூமாவின் புகழ் பாடப் பட்டதை விடவா!

இவர்கள், அந்த நாட்டு மக்களால் மட்டும் அல்ல, வெளிநாட்டு மக்களாலும் பாராட்டப்பட்ட நிலையில் இருந்தனர். முன்பு ! இப்போது? இவர்கள், அடிக்கடி நிலைமை மாறக்கூடிய ஜனநாயகச் சூழ்நிலையில்கூட அல்ல, ‘ஓரே கட்சி’ என்ற கவசம் அணிந்துகொண்ட நிலையில் இருந்து வந்தனர்! அவர்களே, மக்கள் தெளிவு பெற்று சீறி எழுந்த போது, நிலைகுலைந்து போயினர்.

ஒரு நாட்டு ஆட்சியிலே என்றாலும் சரி. ஒரு கட்சியிலே என்றாலும் சரி, புகழ்மிக்க இடம் கிடைத்து