143
என்று என்ன தெரியும்—குழம்பிய மனம்—என்பதை எண்ணினேன், ஓரளவு சாந்தி பெற்றேன். அதிலிருந்து தம்பி, என் மனம், நமது நாட்டு அரசியலுக்குத் தாவிற்று—என் மனக்கண்முன், மூன்று தலைவர்கள் போர்க்கோலம் பூண்டு, மும்முரமாகப் பரணிபாடி பவனி வரும் காட்சி தெரியலாயிற்று.
கெடுமதியுடையோய்! எதையோ சொல்லி வருகிறாய் என்றெண்ணிப் படித்துக்கொண்டே வந்தால், இடையிலே நீ எமது தலைவர்களை இழித்துப் பேசும் கட்டத்தைப் புகுத்துகிறாயே, பித்தர்களின் பேய்ச் செயலைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, எமது ‘மூவர்’ பற்றிப் பேச வருகிறாயே, அங்ஙனமாயின், எமது ‘மூவர்’ பித்தர் என்று கூறவா துணிகிறாய், விடமாட்டோம் உன்னை...என்று கோபத்துடன் கூறிடக் கிளம்பும் காங்கிரஸ் நண்பர்கட்கு, என் விளக்கத்தைத் துவக்கத்திலேயே கூறிவிடுகிறேன்—நான் காட்டிய நிகழ்ச்சியில், விவரமறியாச் சிறுவர்கள் கட்டிப் போடப்பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடியவர் இருவரின் பயங்கர ஆயுதங்களுக்கு இரையாகும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்டார்களே, அதுவரையில்தான், நம் நாட்டு அரசியல் நிலைமையுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கிறது என்று கூறிவிடுகிறேன். இத்தாலி நாட்டிலே இரு பித்தர்கள் செய்த வெறிச்செயல் போன்றதோர் நடவடிக்கை தமிழக அரசியலிலும் இதுபோது நடை பெற்றுக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறதே தவிர, இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள், பித்தர்களாகத் தெரிகிறார்கள் என்று கூறவில்லை. எனவே நமது தலைவர்களைப் பித்தர் என்று தூற்றுகிறேனோ என்றெண்ணிக் கோபம் கொள்ளற்க! என்று நான் கூறுவதாகத் தம்பி! காங்கிரஸ் நண்பர்களுக்குச் சொல்லிவிடு. நமக்கேன் நல்லவர்களின் பொல்லாப்பு!
இத்தாலி நாட்டு இரு பித்தர்கள் பள்ளிச் சிறார்களைக் கட்டிப் போட்டு, கத்தி காட்டி, கொன்று போடுவதாக மிரட்டி, பணத்தைக் கொள்ளை அடிக்க முயற்சித்ததுபோல, இந்நாட்டு மக்களைத் தெளிவுபெறாத நிலையில் தள்ளிவைத்துவிட்டு, அடக்குமுறை, பணபலம் எனும் இரு பயங்கரக் கருவிகளைக் காட்டி, அழித்தொழித்து விடுவதாக மிரட்டி, காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுகளைக் கொள்ளையிடத் திட்டமிட்டு வேலைசெய்து வருகின்றனர். மற்றவர்கள் திகைத்துப்போய், செயலற்றவர்களாகிக் கிடந்தபோது ஓர் ஆரணங்கு, அஞ்சாது போராடி, கொடியவர்களின் கொலைபாதகச் செயலைத் தடுத்து வெற்றி கண்டதுபோல, நாம், இந்தத் தேர்தலிலே, காங்கிரசை எதிர்த்து நிற்கிறோம். அந்த ஆரணங்குக்கு