உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

கத்தை எதிர்த்து நிற்கும் ஓர் கழகம் இருக்கிறது, அது, தி. மு. க. என்பதை, டில்லி வட்டாரத்து ஏடு புரிந்துகொண்டிருப்பது, நன்றாகத் தெரிகிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் இதழில், தி. மு. க. தேர்தலில் ஈடுபட இருப்பது பற்றிய குறிப்புரை வெளிவந்திருக்கிறது.

வழக்கமான வசையும்—சாபமும் காண்கிறேன், குறிப்புரையில்.

கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு காமராஜர் கிளம்பிவிட்டார், எனவே இந்த தி. மு. க.தோற்று அழிந்துபோகும் என்று அந்த இதழ் ‘ஜோதிடம்’ கூறுகிறது.

பிறகோ, அந்த ஜோகிடத்தில் அதற்கு நம்பிக்கையில்லாமல், இந்த தி. மு. க. திராவிட நாடு, தனி நாடு என்றெல்லாம் பேசுகிறது—இப்படிப்பட்ட பேச்சுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று எடுத்துக்காட்டி, வக்கீலாகிறது; வழக்கறிஞர் வேலையில் மற்றவர்களும் ஈடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை என்றால் என்ன, ஐயா! அதற்கு இடம் இருக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி, மக்களிடம் பேசலாமல்லவா, என்று வாதாடக்கூடுமே என்ற அச்சம் பிறக்கிறது. உடனே, வழக்கறிஞர் வேலையை விட்டுத் தொலைத்து, போலீஸ் வேலையை இந்த இதழ் மேற்கொண்டு, தி. மு. கழகத்தை இனியும் சும்மாவிட்டு வைக்கக்கூடாது! இராஜத்துரோகக் குற்றம் செய்கிறது இந்தக் கழகம்! உடனே தகுந்த நடவடிக்கை எடுத்து, தி. மு. கழகத்தை ஒடுக்கித் தீரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது.

ஜோதிடர் வேடம் கண்டு சிரிப்பு வருகிறது, வழக்கறிஞர் கோலம் காணும்போது பரிதாபமாக இருக்கிறது, போலீஸ் குரலில் பேசக் கேட்கும்போதோ, இந்த இதழிடம் எனக்கு அனுதாபம்கூட ஏற்படுகிறது. எவ்வளவு கிலி, பாபம், இந்த இதழுக்கு.

இந்துவும் மித்திரனும் இடம் அளிப்பதில்லை, கல்கியும் விகடனும் கவனம் செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதில்லை, காட்டுக் கூச்சல், கவைக்கு உதவாப் பேச்சு என்று காமராஜர்கள் கூறிவிடுகின்றனர். இந்த நிலையிலேயே, டில்லியில் உள்ள ஏடு, தீபட்டது போலத் ‘தகதக’வென ஆடி, தடி எடு! தடைபோடு! தடைபோடு! என்று கொக்கரிக்கிறது. தம்பி! நீயும் நானும் விரும்புகிறபடியும் நாட்டில் நல்லோர்