உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கடிதம்: 76

சுகஸ்தான் வாசி...

தொழில் துறையில் வடக்கும் தெற்கும்—ரோச்விக்டோரியாவும் T.V.S.ம்

தம்பி!

அமைச்சர் அடித்து அடித்துப் பேசுகிறாராம், வடக்கு தெற்கு என்றெல்லாம் பேசுவது தவறு - பெருந்தவறு—விஷமிகளின் கூக்குரல் என்று பேசுகிறாராம், போகுமிடமெல்லாம்!!

தெற்கே தொழில் சிறிதளவு குறைவுதான்—என்கிறார், உடனே மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்—செய்ததும், குட்டம் பிடித்தவனைக் காணபவர்கள், ஐயா! கொஞ்சம் எட்டி நில் என்று கூறியதும், கோபம்கொண்டு கண்டபடி ஏசுவானல்லவா, அந்நிலை பெற்றவராகி, “இதற்காக ஏன் கத்துகிறீர்கள்! யார் உங்களைத் தொழில் நடத்தவேண்டாமென்று சொன்னவர்கள்? யார் உங்கள் கையைப் பிடித்துத் தடுத்தவர்கள்?” என்று வெளுத்து வாங்குவதாக எண்ணிக்கொண்டு, வகைமுறை கெட்ட நிலையில் வசைமாரி பொழிந்து கொண்டு வருகிறாராம்!

இது, தம்பி! தொழில் நடத்த விரும்பியவரின் கையைப்பிடித்து மட்டுமல்ல, அவருடைய முதுகில் குத்தி, மூக்கினை அறுத்து, மூலையில் டில்லி உட்காரவைத்த சோகக்காதை.

வடக்கே தொழில்வளம் பெருகிவிட்டதே, தெற்கு தேய்ந்துவிட்டதே என்று பேசிக்கொண்டு இருப்பவர்களின்