உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பற்றியும் இலட்சியம் குறித்தும் அறிந்துகொள்ளத்தக்க நிலையை நோக்கி நடைபோடுகிறோம்!—என்ற எண்ணம், என்னைத் தம்பி! என்னென்னவோ இன்ப நினைவுகளைக் கொள்ளச் செய்தது. பாதி இராத்திரி வேளையில், தடதடவெனத் தெருக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்பது போலவும் திறந்த உடனே கரங்களைப் போலீஸ் அதிகாரி பற்றி இழுப்பதுபோலவும், வெளியே தயாராக நிற்கும் வண்டியில் ஏற்றுவதுபோலவும், வழி நெடுக இதுபோன்ற வண்டிகள் நடமாடுவதுபோலவும், திராவிடரில் ஒரு பகுதியினர் சிறையில் என்னோடு இருப்பது போலவும், இப்படி எல்லாம், காட்சிகள்!!

முதலமைச்சர்கள் மாநாட்டைத் தொடர்ந்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவார்களானால், தம்பி! என்னென்ன நடைபெறக்கூடும், என்று எண்ணிப் பார்த்தனையா? பொலிவு மிக்க முகத்தினராய், வலிவு மிக்க குரலில், திராவிடநாடு திராவிடருக்கே என்று முழக்கம் எழுப்புகிறார்களே நமது தோழர்கள், பட்டி தொட்டிகளிலும், மும்மூன்றாண்டு உள்ளே தள்ளலாம். அதற்கே!!

ஆமாமடா, தம்பி! காட்டுக் கூச்சல்! வறட்டுக் கூச்சல்! என்றார்களே! அது, புதியதோர் குற்றம்!! மூன்று ஆண்டுகள் உள்ளே!! கொடிக்குத் தடை! கூட்டத்துக்குத் தடை! ஏடுகளுக்குத்தடை! இலட்சியத்துக்குத் தடை!! உம்! மளமளவென்று வரக்கூடும் எல்லாம். தேர்தலுக்கு முன்பா, பிறகா, என்பதுதான் பிரச்சினை!

திராவிடநாடு திராவிடருக்கே என்று கேட்பது, பிரிவினைப் போக்கு, அது, சட்டப்படி குற்றம்—மூன்றாண்டு உள்ளே!— என்று நிலைமை ஏற்பட்டால், நாட்டிலே, அந்த முழக்கமே எழாது. இயக்கமே இருக்காது என்று, ‘வந்தே மாதரம்’ கூறுவது குற்றம் என்று கூறப்பட்டதை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட, காங்கிரசார் நம்புகின்றனர். ஏன், தம்பி? நம்மைக் கோழைகள், கொள்கையிலே வலிவற்றவர்! குடும்பம் பெரிது குவலயம் சிறிது என்று கொள்பவர்கள் என்று எண்ணுகிறார்கள்.

“ஏன் வீணாகச் சிக்கிக் கொள்கிறீர்கள்? இன்னின்னார் இப்படி வரும் என்று அறிந்து, முன்னதாகவே எங்களுக்குத் திராவிடநாடு வேண்டாமே என்று சொல்லி, தப்பித்துக் கெண்டார்களே, அதுபோல, நீங்களும் ஓடிவிடுங்கள்;