128
நாட்டிலே உள்ள ஏற்பாடுகளின் தன்மைபற்றி எடுத்துரைக்கலாம்; போர் செய்திடப் பொன்னான வாய்ப்பு, மூன்று திங்களிலே ஏற்படும் என்பதற்கான காரணங்களை விளக்கலாம்; என்று அவன் சென்றான். ஹிட்லரோ, சட்டையிலுள்ள பொத்தான்கள் எத்தனை என்று கேட்டுவிட்டார்; தெரியவில்லை கூற; திணறுகிறான்; ஆனால் உலகை ஒரு குடைக்கீழ் ஆளும் வல்லமை மிக்கோன், தந்தையர் நாட்டுக்குப் புதிய நிலை ஏற்படுத்திக் கொடுத்த தலைவன், இந்தப் பொத்தான் கணக்கினைக்கூட அறிந்துவைத்திருக்கிறானே! நாம் இதனை அலட்சியப்படுத்தினோம் — நம் அதிபனோ, இதனையும் அறிந்து வைத்திருக்கிறான்! இல்லாமலா, அதிபர் என்ற நிலைக்கு ஆண்டவன் இவரை உயர்த்தியிருக்கிறார். இத்துணை அறிவாற்றல் மிக்கவர், படை எடுப்புக்கு நாள் குறித்தால், எல்லாம் அறிந்துதான் குறித்திருப்பார்! நாம், யார், அதைக் குறைகூற; ஐயப்பாடு; எழுப்ப! அதிபர் அறிவார் அனைத்தும்!! —என்றுதான், படைப்பிரிவுத் தலைவனே எண்ணுவான், பேசுவான், பாராட்டுதலுடன்.
ஆனால் உண்மையில் ஹிட்லர், போர்த்துறைப் பிரச்சினைகளிலே வல்லவன் அல்ல, என்பது, அவன் ஒரேநேரத்தில், பலமுனைகளில் களங்களை உண்டாக்கிக்கொண்டு கெட்டொழிந்ததால், விளக்கமாகிறது.
அந்த முடிவு எழுகிற வரையில், ஹிட்லர் கொட்டிக் காட்டிய, ‘தகவல்கள்’—எதுவும் தன் நினைவிலே பதிந்து இருக்கும் என்று எடுத்துக்காட்டியது, ஆகியவற்றைப் பார்த்து உடனிருந்தோர் மட்டுமா, உலகினரே, மலைத்துக் கிடந்தனர்.
தம்பி! இதுபோலவே, மிகச்சாதாரணமான, அடிப்படையல்லாத தகவல்களைச் சேகரித்து நினைவிலே வைத்துக் கொண்டு, உடனிருப்போரைத் திணற அடிக்கும் கருத்துக் கழைக்கூத்தர் நிரம்ப இருக்கிறார்கள்; பார்த்திருப்பாய்.
அவர்கள் தம்மை, ஆதாரமளிக்கும் ஆற்றல் மிக்கோர் என்றும், புள்ளிவிவரப் புலிகளென்றும், பிறர் எண்ணிக் கொள்ளும்படி நடந்துகொள்வர்.
உழவர்களுக்குப் பொறுக்கு விதைகளின் அருமை பற்றிய தகவல் அளிப்பர்; ஏர் பூட்டி ஓட்டி அறியார்! வணிகர்களுக்கு, ஜாவா சாக்கரையால் கிடைக்கக்கூடிய இலாபம் பற்றி எடுத்துரைப்பார்கள்; ஒரு தொழிலிலும் ஈடுபட்டு இலாபம்