160
கண்டவர் மெச்சும் காவியமும், கண்ணைக் கவரும் ஓவியமும் வளம்தரும் தொழில்கள் வகைவகையாய்க் கண்டவர் தமிழர்! சோறுண்டார்! அவர்தமை ஏசும் காங்கிரசை ஆதரிப்பது அறமாமோ?
அருந்தமிழ் நாட்டை ஏசுகிறார் ஆளுங் காங்கிரஸ் கட்சியினர். அவர்க்கோ ‘ஓட்டு’! ஐயயோ!!
வளர்த்த, காங்கிரஸ் இன்று
செக்கு தரும் சீமானிடம் பல்லிளிக்குதே!
வெட்கம்! வெட்கம்! என்று காலம் காரித்துப்புதே!
விலங்கொடித்த வீரர்களே!
விம்மிப் பயன் என்ன!
வீறுகொண்டெழுந்திடுவீர்
மரபு காத்திட!
‘உதயசூரியன்’ ஒளியை நாடு பெற்றிட!
‘ஓட்டு’களை அளித்திடுவீர் புதுவாழ்வு பெற்றிட!
காத்திருந்தவன் பார்த்த பெண்ணை
நேத்து வந்தவன், கடத்திச் சென்ற
கதையைப் போலக், காங்கிரசாட்சியில்
கஷ்டம் தீரும் என்று ஏழை காத்திருக்கையில்,
கள்ள மார்க்கட்காரன் வந்து அடித்தான்
கொள்ளை!! கையைத் தலையில் வைத்தழுதான்
உழைக்கும் ஏழை!
உழைத்தலுத்த உத்தமனே! அழுதது போதும்!
உதிக்குதுனக்காகவே ‘உதயசூரியன்’.
இன்ப ஒளி பெற்றிட நீ வாராய் என்று
அன்புடனே அழைத்திடுது, தி. மு. கழகம்.