உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

புஞ்சை, நஞ்சை ஆச்சென்றார்,
புதுப்புதுப் பாசனம் பார் என்றார்,

விளையுது நெல்லு மலைபோல என
விளம்பரம் பலமாய்ச் செய்திட்டார்,

விளைச்சல் அதிகம் ஆனபின்பு
விலைகள் விஷம்போல் ஏறுவதேன்?

வீட்டைத் தேடிக் காங்கிரசார்
ஓட்டுக் கேட்க வரும்போது

விளக்கம் கேட்பீர், தோழர்களே!
திருவிடம் விடுதலை பெற்றிடவே

தி.மு. கழகம் ஆதரிப்பீர்!
‘உதயசூரியன்’ உம் சின்னம்

உலகு தழைத்திடச் செய்வதுவும்
‘உதயசூரியன்’ உணர்ந்திடுவீர்!

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஏட்டினில்
இந்தி குட்டக் குனியும் குணக்கேடர்கள் நாட்டினில்!

கடன் பட்ட நாடு காவல் இல்லா வீடு

விழி இழந்தும் வாழலாம்
மொழி அழிந்தால் வாழ்வில்லை.

தட்டிக்கேட்க ஆள் வேண்டாமாம்
தாள் வேண்டாமாம், கதவுக்கு!

உரிமை இழந்த நாடு உயிரற்ற வெறும் கூடு

சாக்காடு மேல் என்று புலம்பும் நிலை
பூக்காடு எனப்புலவோர் மொழிந்த நாட்டில்.

சங்கம் கண்டார், முன்னவர்; தென்னவர்
பங்கப்படுகிறோம், இன்று; அவர், வழி வழி!

வாளும் வேலும், முன்னோர் கரத்தில்
தளையும் வளையும் இன்றுளார் கரத்தில்!

இனத்துக்குள்ள இயல்பினை
எவரே அழிக்கவல்லவர்கள்?