உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

இவைகளையும் இவை போன்றவைகளையும் எடுத்துக் கூறி, நாட்டினருக்குக் கருத்து விளக்கமளிக்க நாட்கள் இல்லை, தம்பி! நாட்கள் அதிகம் இல்லை!

எவரெவர் எந்த எந்தத் தொகுதி என்பதும் அறிவிக்கப்படவில்லையே, என்பது குறித்துக் கவலைப்படாதே. உன் கடமை ‘உதயசூரியன்’ வெற்றிக்காகப் பாடுபடுவது. எனவே, தம்பி!

உறங்கும் உலகை எழுப்பிவிடும்
                              உதயசூரியன்!
உலகு தழைக்க ஒளி தருவது
                              உதயசூரியன்!
உழைப்பவர்க்கு உரிய சின்னம்
                              உதயசூரியன்!
உமது வாழ்வு மலரச்செய்வது
                              உதயசூரியன்!
இருளகற்றி எழிலளிக்கும்
                              உதயசூரியன்!
இன அரசு விரும்புவோர்க்கு
                              உதயசூரியன்!
திருவிடத்தின் விடுதலைக்காம்
                              உதயசூரியன்!
தி. மு. கழக தேர்தல் சின்னம்
                              உதயசூரியன்!
ஓட்டுப் போட ஏற்ற சின்னம்
                              உதயசூரியன்!
நாட்டினரே! போற்றிடுவீர்!
                              உதயசூரியன்!