164
ஞாயிறு பேற்றதும் என்று கூறினாரன்றோ, இந்த ஞாலம் போற்றும் பேரறிஞன், இளங்கோவும்! அந்த ஞாயிறு இல்லாவிட்டால் ஞாலம் ஏது?
உயிர்களுக்கெல்லாம் உற்ற தோழன்
உதயசூரியன்!
அரும்பை மலரச் செய்பவனும்
உதயசூரியன்!
அனைத்துக்கும் ஒளி ஊட்டுபவன்
உதயசூரியன்!
அகிலம் ஆளும் வலிமை பெற்றோன்
உதயசூரியன்!
பொங்கிவிடும் வளத்தைத் தந்திடுபவனும்
உதயசூரியன்!
இதனை நாடு அறிந்து, நல்லோர் எல்லாம் நம்மவராகி நாட்டின் நலிவு போக்கிடும் பணியில், நமக்காதரவு மிகவும் தந்திடச் செய்திடல், உன் கடன் அறிவாய் தம்பி! மற்றவை தொடர்ந்து தெரிவித்திடுவேன், மரபு காத்திடும் உடன் பிறந்தோனே!
29-10-61
அண்ணன்,
அண்ணாதுரை