உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தம்பி! இதோ ஒரு குடிசை! சற்று உள்ளே செல்வோமா— கற்பனை உலகுதானே! யாரும் நம்மைக் காணமாட்டார்கள், வா; அஞ்சாமல் வருகிறான் பார்! வண்டி ஓட்டும் முனியன்! மிட்டா மாணிக்கத்திடம் வேலை. அவன் மனைவி முத்தம்மா! இருவரும் பேசிக்கொள்கிறார்கள் கேட்போம், சந்தடி செய்யாமல், உற்றுக் கேள்:

முனியன் :

அய்யா செய்யும் அக்கிரமம்
அய்யே! உனக்குத் தெரியாதென்று
கேலி என்னைச் செய்தாயே!
கேளடி! கேளடி! முத்தம்மா!!
நாடு மீட்டவர் நல்லவர்கள்
ஆட்சி நடத்தி வருபவர்கள்
காங்கிரசார் எனச் சொன்னாயே
அந்தக் காங்கிரஸ்காரர் செயலதனை
கேளடி முத்து! கேளம்மா!
நம்ம அய்யா வீடு வந்தார்கள்!!

முத்தம்மா :

ஊரை ஆளும் உத்தமர்கள்
உங்க அய்யாவிடமா வந்தார்கள்?
உலகம் புகழ வாழ்பவர்கள்
உங்க அய்யாவிடமா வருவார்கள்?
நாடு மெச்ச வாழ்பவர்கள்
நாடி வருவரோ, அவரிடந்தான்?

முனியன் :

வந்ததைக் கண்ணால் பார்த்தேண்டி!
வாய்பிளக்க நின்றேண்டி!
வந்தார் காங்கிரஸ் தலைவரெலாம்
வரிசையாகவே மாளிகைக்கு!