இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
204
முத்தம்மா :–
நேருவா இவருக்குப் போடச்சொல்லுறார்
நேர்மைக்கும் இவருக்கும் பகையாச்சே!
நேத்துவரை, காங்கிரசின் எதிரியாச்சே!
முனியன் :-
இருந்தால் என்ன முத்தம்மா!
இதுதான் இப்பத்திக் காங்கிரசு!!
முத்தம்மா :-
‘ஓட்டு’ சீட்டுள்ள மக்களெல்லாம்
உன்னைப்போல இருந்திடப் போவதில்லை
உழைப்புக்கும் உண்மைக்கும்
தோல்வி இல்லை பார்!
உங்க எஜமானருக்குப் பட்டை நாமம் தான்!
ஊர்க்குடி கெடுப்போர்க்கு ஓட்டு இல்லை
ஊராளும் காங்கிரசு பேர் சொன்னாலும்
உதயசூரியன் சின்னந்தான்
உழைப்பின் சின்னம், ஊரறியும்.
உழைக்கிற மக்கள் ‘ஓட்டு’ உண்மையாக
அதற்கேதான்!
ஊர்முழுதும் படைதிரட்டி
உங்க எஜமானரை நான்
தோற்கடிப்பேன்!!
‘உதயசூரியன்’ சின்னம்
வெற்றிபெற
உழைப்பேன்; இது உறுதி
அறிந்திடு நீ !
முனியன் :–
மூளை உனக்குத் தானோடி
மொத்தமாய் இருக்குது முத்தம்மா!