உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

நானும் உண்மை அறிவேண்டி
நாடும் தூங்கிக் கொண்டில்லை!
நம்மைப்போலப் பாடுபடும்
ஏழை மக்கள் எல்லோர்க்கும்
ஏற்ற சின்னம் அறிவேண்டி
‘உதயசூரியன்’ நம் சின்னம்
உழைப்போம், வெற்றி பெற்றிடுவோம்.

தம்பி! நாடெங்கும் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்ச்சியின் விளைவுகளாக அமைந்துள்ள எழுச்சிமிகு நிகழ்ச்சிகளிலே, ஒன்று இது.

மக்கள் தெளிவுடன்தான் உள்ளனர் பயம் வேண்டாம்!

பணம் படைத்தோர்களைக் காங்கிரஸ் கட்சி எதற்காகப் பிடித்திழுத்துத் தேர்தலிலே நிறுத்துகிறது என்பது, ‘பாமரர்’ என்று ஆட்சியாளர்களால் ஏளனமாகக் கருதப்படும் மக்களுக்கும், மிக நன்றாகப் புரிந்துதான் இருக்கிறது. எனவே தம்பி, இனி உன் வேலை, ஏற்கனவே, மக்கள் அறிந்திருப்பதை, அடிக்கடி பக்குவமான முறையிலே, கவனப்படுத்தியபடி இருப்பதுதான்.


தி. மு. க.

சட்டசபை சென்று

கொள்கை இழக்கவில்லை
கோணல்வழி செல்லவில்லை.

கோலேந்தும் காங்கிரசின்
கோலம் கண்டு

மயங்கவில்லை
மருளவில்லை

நாடு செழித்திடும் திட்டம்
நல்லாட்சிக்கான சட்டம்