22
யிலே, தங்கள் போக்கையும் நோக்கையும். பேச்சையும், செயலையும் ஆக்கிக் கொள்ளமாட்டார்கள். மிகுந்த விழிப்புடனிருந்து, ஏக இந்தியாக்களின் சதியை முறியடிப்பர்.
விலைக்கு வாங்கப்பட்டவர்கள் தவிர, வழுக்கி விழுந்தவர்கள் தவிர, குறுக்கு வழியில் புகழடைய நினைப்பவர் தவிர, மற்ற எவரும், ஏக இந்தியா நடத்தும் கபட நாடகத்தால். ஏமாந்து போகமாட்டார்கள், என்பது திண்ணம்.
“என்னய்யா திராவிடநாடு! தமிழ்நாடுதான் வேண்டுமென்கிறார்களே இன்னின்னார்! உன்னுடைய திராவிடநாடு கேலிக்கூத்தாமே! தமிழ்நாடுதான் சரியான திட்டமாமே!”—என்று, ஏக இந்தியாக்கள் கேட்கும்போது, நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், அந்த ‘ஏக இந்தியாக்கள்’ நமது நோக்கை வேறுபக்கம் திருப்பிவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் தந்திரமாக! என்பதை.
தமிழ்நாடு கேட்பவர்களிடம், ஏக இந்தியாக்கள் சென்று, இதுபோலவே கிளறுவார்கள் — தமிழ்நாடு கூடாதாமே! திராவிடத்தார் கூறுகிறார்களே!—என்று. உடனே, தமிழ்நாடு கேட்பவர்கள், வந்தது சண்டை! இறக்கடி கூடையை!! என்ற போக்கிலே, திராவிடநாடு கேட்பவர்கள்மீது பாய்ந்தால், ஏக இந்தியாக்கள், தனியாகச் சென்று, கைகொட்டிச் சிரிப்பார்! சிண்டு முடிந்துவிட்டோம்! கண்டபடி பேசுகிறார்கள்!!— நம்பாடு இலாபந்தான்!!— என்று பேசி மகிழ்ந்துகொண்டிருக்கும்.
மாறா ஏகஇந்தியாக்கள், கிளற, கிண்டிவிட, தூபமிட, தூக்கிவிட, சிண்டுமுடிந்துவிட, முனையும்போது, அடிப்படையை மறவாமல், “ஐயா! ஏக இந்தியா! உம்வேலை எமக்குப் புரியும் நன்றாக! கபடநாடகம் கண்டு கருத்தழிய மாட்டோம். எமக்குள்ள நோக்கம், இந்தியப் பேரரசு எனும் சூழ்ச்சிக்கோட்டையைச் சுக்குநூறாக்குவது. அந்தக் காரியத்தை நாங்கள் செய்யாமல் தடுக்க, சூது செய்கிறாய்— புரிகிறது. நாங்கள் பலியாக மாட்டோம். எமது எதிர்ப்பை நிறுத்திக்கொள்ளவும் மாட்டோம், மாற்றிக்கொள்ளவும் மாட்டோம். என்று கூறிடும், துணிவும் தூய்மையும் எழவேண்டும். எழுந்திடின் ‘ஏதேது! சிண்டு முடிந்துவிட முடியாது போலிருக்கிறதே!” என்று உணர்ந்து, ஏக இந்தியாக்கள் மூலை செல்வர்.